Header Ads



புத்தளம் - மன்னார் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது


(அபூ நாதில்)

தற்போது  பெய்து வரும் கடும் மழை காரணமாக எழுவங்குளம் ஊடாக செல்லும்  புத்தளம் - மன்னார் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக புத்தளம் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
புத்தளம் - மன்னார் வீதியில் கலா ஓயாவை  ஊடறுக்கும் இடம் தற்போது சுமார் மூன்று அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் புத்தளம் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் புத்தளத்திலிருந்து மன்னாருக்குப் பயணம் மேற்கொள்ளும் வாகனங்கள் அநுராதபுரம் ஊடாக  தமது பயணங்களை மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர். . அத்துடன் கலா ஓயாவின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதன் காரணமாக அப்பிரதேசத்தைச் சூழவுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும்  கேட்கப்பட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.