அமெரிக்க பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கவேண்டாமென கோரிக்கை
මැක්ඩොනල්ඞ්, KFC ට හලාල් දෙන්න එපා, ජමිතුල් උලමාගෙන් ඉල්ලයි
කොළඹ මහ නගර සභාවේ නාගරික මන්ත්රී මොහොමඞ් මුසම්මිල් විසින් මෙම ඉල්ලීම ඉදිරිපත් කර ඇත්තේ සමස්ත ලංකා ජමිතුල් උලමා සංවිධානයෙනි.
මැක්ඩොනල්ඞ්, KFC ආදී සියළු වෙළඳනාමයන්ට හලාල් සහතිකය නිකුත් කිරීම වහා නතර කල යුතු යයිද ඔහු සිය ලිපියෙන් කියා ඇත.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கக்கூடாதென்று இலங்கையில் ஹலால் சான்றிதழ் வழங்கும் அமைப்பான ஜம்இய்யதுல் உலமா சபையிடம் தேசிய சுதந்திர முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளருமான மொகமட் முசம்மில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையிடம் எழுத்துமூல வேண்டுகோளினை விடுத்துள்ளார்.
அவ் வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'உலக முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்களை முன்னெடுக்கும் அமெரிக்காவால் உற்பத்திசெய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ஹலால் சான்றிதழ்களை மீளப்பெற வேண்டும்.
இவ்வாறு செய்வதனூடாக அமெரிக்காவிற்கு எதிராக எதிர்ப்பினை வெளிக்காட்டுவதன் மூலம் எதிர்காலத்தில் அமெரிக்காவின் எந்தவொரு உற்பத்திப்பொருட்களுக்கும் ஹலால் சான்றிதழ் வழங்காது முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையையும் எதிர்ப்பையும் வெளிக்காட்டமுடியும்.
Post a Comment