அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் - சவூதி அரேபிய மன்னர் உபதேசம்
(எப்.எம். பைரூஸ்)
முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்குச் சவாலாக இருக்கும் அறியாமை, அநீதி ஆகியவற்றுக்கு முடிவுகட்டப்பட வேண்டுமென தெரிவித்துள்ள சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீஸ் அல் சவூத், முஸ்லிம் விடயம் தொடர்பாக பிறருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
மினாவில் உள்ள தமது மாளிகையில் சவூதி மன்னர் இம்முறை ‘ராபிதா’ மூலமாக ஹஜ்ஜூக்கு வந்தவர்களைச் சந்தித்த போது இதனைத் தெரிவித்தார். இச்சந்திப்பு 27ஆம் திகதி நடைபெற்றது.
ஹஜ் யாத்திரிகர்கள் மன்னரின் மாளிகையில் வரவேற்கப்பட்டனர். புனித பூமியில் ஹாஜிகளை வரவேற்றுக் கிடைத்ததைப் பெருமையாகக் கொள்வதாகக் கூறிய மன்னர், அல்சவூத், தனது குடும்பங்களை, செல்வத்தை, வீடுகளை, வழக்கமான வாழ்க்கை முறைகளை விட்டு மக்கா வந்து நம்பிக்கையின் ஐக்கியத்தால் நாம் ஒன்றுபடுவதாகவும் குறிப்பிட்டார்.
புனித அல்குர்ஆனின் ‘சூராக்கள்’ பலவற்றை தமதுரையில் ஓதிய மன்னர் சவூத், எமது நாடுகளினதும், சமூகங்களினதும் மேம்பாட்டுக்கும் பாடுபட முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுக்கும் அல்லாஹ் உதவ வேண்டுமெனப் பிரார்த்திப்போம். தமது மக்களுடனும், நாடுகளுடனும் செயற்படும்போது அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுமாறு முஸ்லிம் தலைவர்களைக் கோருகிறோம் என்றும் மன்னர் தெரிவித்தார்.
மன்னரின் உரையைத் தொடர்ந்து அங்கிருந்த ஹஜ் யாத்திரிகர்கள் மன்னரைச் சந்தித்து நல்வாழ்த்து கூற வாய்ப்பு வழங்கப்பட்டது. இலங்கை ஹஜ் விவகா ரத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளஸி மற்றும் உலக நாடுகளின் தூதுவர்கள், அமைச்சர்கள், பிரமுகர்களும் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து மன்னர் மினா மாளிகையில் சலருக்கும் பகற்போசன விருந்துபசாரம் அளித்தார்.
மன்னரிடம் இருந்து நல்ல வார்த்தைகள் அவரும் அல்லாஹ்விட்கு
ReplyDeleteபயப்படுவார் என நினைக்கிறோம் இனியாவது நல்லது நடக்கட்டும்...உலக முஸ்லிம்களின் தற்போதைய நிலை யை உணர்ந்து செயல் பட வல்லோனை பிரார்த்திப்போம்....