அரசாங்கம் - முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் குறித்து தவம் விளக்குகிறார்..!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 11 வருடங்களின் பின் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியை பெற்றிருக்கின்றது இதற்கு பிறகு வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களிலும் முஸ்லிம் காங்கிரஸ்தான் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கப்போகிறது என்பதனை தமிழ் தேசியம் மிகத் தெளிவாக கணித்திருக்கிறது இதனை உடைத்துவிட முடியாது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்
கிழக்கு மாகாணசபை அமைச்சர் எம்.ஐ.முகம்மட் மன்சூர்க்கு சம்மாந்துறையில் இடம்பெற்ற வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்படி கூறினார் தொடர்ந்து அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கோட்பாட்டு ரீதியாக முஸ்லிம்களை தனித்த இனமாக ஏற்றுக்கொள்ள வில்லை அவ்வாறு ஏற்றுக்கொள்கின்ற சூழ்நிலை வருகின்றபோது இன்சா அல்லாஹ் முஸ்லிம் காங்கிரசும் தமிழ் கூட்டமைப்பும் சேர்ந்து உறவாடி சிறுபான்மை இனத்திற்கான அரசியல் உரிமைகளை இரண்டறக்கலந்து தோழோடு தோழ் நிற்கும் ஆனால் அந்தக் காலம் இன்னும் வரவில்லை என்பதுதான் உண்மையான விடயம் இதனால்தான் கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நாம் கூட்டாக சேர்ந்து ஆட்சியமைத்துவிட முடியாமல் போனது இதுதான் ஆட்சியமைக்கமுடியாமல் போனமைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று.
நமது முஸ்லிம் சமூகத்தினது இனப்பிரச்சினை தீர்வு வருகின்றபோது இதைத்தான் கொடுக்கப்போகிறோம் என்று பகிரங்கமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்வைக்காதவரைக்கும் முஸ்லிம் தேசியம் தமிழ் தேசியத்தோடு ஒருக்காலும் இணைந்து போகமுடியாது 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் நம்மை தமிழ் தேசியம் நிராகரித்துத்தான் ஒப்பந்தத்தைச் செய்தது. இப்படி இதற்கு பின்னால் பல விடயங்களில் முஸ்லிம்களை நிராகரித்துத்தான் செயற்பட்டார்கள். தீர்வு பற்றிய பேச்சு எப்போது வந்தாலும் நம்மை புறந்தள்ளித்தான் பேசியிருக்கிறார்கள். இப்படியிருக்கும்போது தமிழ் தேசிய கூட்டமைப்போடு எந்தளவில் முஸ்லிம் சமூகத்தின் இருப்பை தக்கவைத்துக்கொள்ளலாம் என்றுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய கேள்வி. ஆகவேதான் இறுதித் தீர்வில் முஸ்லிம்களுக்கு என்ன அந்தஸ்தை தரப்போகிறார்கள் என்பதனை தமிழ் தேசியம் மிகத் தெளிவாக கூறாதவரைக்கும் தழிழ் தேசியத்தோடு உடன்பட்டுப் போக முடியாது. இது யதார்த்தம் அதற்காக தமிழ் கூட்டமைப்போடும், தமிழ் சமூகத்தோடும் முஸ்லிம் சமூகம் எதிரி என்பது கருத்தல்ல. காரைதீவு பள்ளிவாசலுக்குரிய அனுமதிப்பத்திரத்தை தரச் சொல்லுங்கள், வவுனியா பள்ளிவாசலினுடைய அனுமதிப்பத்திரத்தினை தரச் சொல்லுங்கள் வேறு ஒன்றும் தேவையில்லை தமிழ் தேசியத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் சேர்ந்து போவதற்கு தயாராக இருக்கின்றது. இதுதான் தமிழ் தேசியத்தினுடைய மனநிலை. சாதாரணமாக இந்த பள்ளிவாசலினுடைய அனுமதிப்பத்திரத்தினையே தர முடியாதவர்கள் நமக்கென்று தீர்வைத் தருவார்கள் என்று என்ன உத்தரவாதம் இருக்கிறது?
குறிப்பாக அரசாங்கத்தோடு ஆட்சியமைத்துள்ளமை பற்றி கூறப்போனால் முஸ்லிம் காங்கிரசை பொறுத்தவரை இந்த அரசாங்கத்துடனான உறவுகளிலே இருக்கின்ற விரிசல்கள் இந்த அரசாங்கத்துடன் இருக்கின்ற நம்பிக்கையை கட்டி வளர்க்கவேண்டிய தேவை முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்றது ஏனென்றால் கடந்த பொதுத்தேர்தல் நடந்து 2 வருடங்கள்தான் நிறைவு பெற்றிருக்கின்றன மீதி 4 வருடங்கள் முழுமையாக இருக்கின்றது அதே போன்று ஒரு எதிர்க்கட்சியாக இன்னுமொரு ஆட்சி மாற்றத்திற்கான சூழல் தோன்றியிருக்கிறதா என பார்த்தால் அதையும் காணவில்லை இப்படியான சூழ் நிலையில் இருக்கும் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபையில் எதிர் அணியில் போய் அமர்ந்து என்ன சாதிக்க முடியம் ஒன்றுமே செய்ய முடியாது முஸ்லிம் சமூகம் மிக நீண்டகாலமாக அனுபவித்துக்கொண்டிருக்கின்ற நிருவாக ரீதியிலான எந்தப்பிரச்சினையிலும் ஏதாவது ஒன்றை தமிழ் கூட்டமைப்பால் நிறைவேற்றித்தரமுடியுமா? இல்லை அவர்களுக்கே அவர்களுடைய பல பிரச்சினைகளை கூட செய்து கொள்ள முடியாமல் இருக்கின்றபோது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியிருக்கின்ற எத்தனையோ பிரச்சினைகளை எவ்வாறு செய்து கொள்வது? தமிழ் கூட்டமைப்பு கூறிய முதலமைச்சரை பெற்றுக்கொண்டு எமது பிரச்சினைகளை யாரிடம் கேட்பது? என்ற விடயம் இருக்கிறது.
அது மாத்திரமல்ல அரசாங்கத்தோடு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தெளிவான உடன்படிக்கையை செய்திருக்கிறது அடுத்த இரண்டரை வருடங்களுக்கு முஸ்லிம் முதலமைச்சர் அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்ற முஸ்லிம் மக்களை கொண்ட ஓர் நிருவாக அலகு, குச்சவெளியிலும், புல்மோட்டையிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக கொண்ட நிருவாக அலகுகள் என்று முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருக்கின்ற அரசியல் உடன்படிக்கை இந்த தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு செய்ய முடியுமா? முடியாது. மிகத் தெளிவாக எழுத்திலே அதே போல் அம்பாரை மாவட்ட நிருவாக அலகு இப்படியான பல ஒப்பந்தங்களில்தான் அரசாங்கத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போயிருக்கிறது
அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கிறது எப்படியென்றால் அமைச்சர் அதாஉல்லா கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் 36ஆயிரம் இவற்றில் இருந்து 19ஆயிரம்வரை குறைக்கப்பட்டுள்ளது அவர் சார்பாக கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளவர்கள் சாரசரியாக பெற்றிருக்கும் வாக்குகள் 19 ஆயிரம் ஒருவருக்கு 3ஆயிரம் வாக்குள் கூடுதலாக போடப்பட்டிருக்கிறது அது சிங்கள சகோதரர்களுடைய வாக்குகள். இதனைப் பார்த்தால் 17 ஆயிரம் வாக்குகளால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்கடித்துள்ளது. எனவே நமது சமூகத்தை பற்றிய புரிந்துணர்வுகளுடனும், தேடல்களோடும் நமது இயக்கத்தை, சமூகத்தையும் பலப்படுத்த முன்வரவேண்டும் என் மேலும் கூறினார்.
Mr.Thavam is right. What he says 100/100 true.I agree with him.This is the history of Tamils specially Jaffna based leadership of Tamils.They not only in Srilanka but globally advocated that they are the voice of Muslim like Tamil christian Tamil Hindu Tamil muslim. They have not accepted we have our own idiendity. They wanted to rule us.That is their motive. That will never happen
ReplyDeleteமுதலில் நமது சமுகம் தெரிந்துகொள்ள வேண்டியது :-
ReplyDeleteதலைவர் அஷ்ரப் மரணித்தபோது கருப்பு கொடி கட்டி கற்கண்டு கொடுத்த தவம் முஸ்லிம் காங்கிரஸ் சில் என்பது வேட்க்கேக்கேடு
ஹக்கீமுக்கு பழைய வரலாறு தெரியாது போலும்
குருடன் யானை பார்த்த கதைதான்
ReplyDelete