காற்று நீரிலிருந்து பெட்ரோல் தயாரிப்பு - இங்கிலாந்து பொறியியலாளர்கள் அசத்தல்
இங்கிலாந்தில், ஏ.எப்.எஸ் என்னும் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் காற்று மற்றும் நீரிலிருந்து பெட்ரோல் தயாரித்து சாதனை படைத்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் காற்று மற்றும் நீரிலிருந்து, அவர்கள் சுமார் ஐந்து லிட்டர் அளவுக்கு பெட்ரோல் தயாரித்துள்ளனர்.
காற்றிலிருந்து கார்பனையும், நீரிலிருந்து ஹைட்ரஜனையும் பிரித்தெடுத்த அவர்கள், கார்பன், ஹைட்ரஜனை உலையில் இட்டு, மெத்தனால் தயாரித்துள்ளனர். பின்னர் மெத்தனாலிலிருந்து பெட்ரோல் தயாரித்துள்ளனர்.
இது செயற்கை முறை என்பதால் இவ்வகையில் தயாரிக்கப்படும் பெட்ரோல் தூய்மையாக இருக்கும் எனவும், இதனால் காற்று மாசுபடுவதை தடுக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இவ்வகை பெட்ரோலின் விலை சாதாரண விலையை விட அதிகமாக இருக்கும் எனவும் பொறியாளர்கள் கூறினர். அடுத்த இரண்டு வருடங்களில் இதற்காக ஆலை ஒன்றை நிறுவப் போவதாகவும், அதன்மூலம் ஒரு நாளைக்கு 1200 லிட்டர் அளவுக்கு பெட்ரோல் தயாரிக்கப் போவதாகவும் அவர்கள் கூறினர்.
எனினும் இவ்வகையில் தயாரிக்கப்படும் பெட்ரோலின் விலை உயர்வாக இருக்கும் என்பதால், பெட்ரோல் தட்டுப்பாடாக இருக்கும் காலங்களில் இத்தகைய முறையை பயன்படுத்த இயலுமே தவிர, பெட்ரோல் விலையைக் குறைக்க இது எவ்வகையிலும் உதவாது.
Post a Comment