அங்கிள் பாகிஸ்தான் வபாத்தானார்
இந்தியா - பாகிஸ்தானின் முக்கிய எல்லையாக பஞ்சாபில் உள்ள வாகா எல்லை விளங்குகிறது. இங்குள்ள எல்லைக் கேட்டை இரு நாட்டு ராணுவ வீரர்களும் அவரவர் பகுதியில் திறந்து மாலையில் மூடுவார்கள். சூரியன் மறையும் வேலையில் இங்குள்ள எல்லைக்கேட்டை இருநாட்டு வீரர்கள் வீரவணக்கம் செலுத்தி மூடுவதை காண அப்பகுதியில் மக்கள் அங்கு கூடுவார்கள்.
பாகிஸ்தானை சேர்ந்த மெர் தின் என்பவர் அந்நாட்டு கொடியின் நிறமான பச்சை வெள்ளை கலரில் உடை உடுத்தி தினந்தோரும் மூடுவிழாவின் போது கொடியசைத்து அங்குள்ளவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவார். இதற்காக அவருக்கு மாதம் 14000 ரூபாய் அங்குள்ள பாதுகாப்பு படையினர் வழங்கிவந்தனர். லாகூருக்கு அருகில் உள்ள வாக எல்லையில் பிரபளமான இவரை அங்கிள் பாகிஸ்தான் என்று அனைவரும் அழைத்தனர்.
காய்கறி வியபாரம் செய்து பிழைத்து வந்த 90 வயதான அவர் கடந்த ஞாயிறன்று மரணமடைந்தார். சிறந்த நாட்டுபற்றாளானக சித்தரிக்கப்பட்ட அவரின் இறப்புக்கு எல்லையில் உள்ள காவலர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர்.
Post a Comment