கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெவ்வையிடம் மகஜர் கையளிப்பு
(எஸ்.எல். மன்சூர்)
அண்மையில் அக்கரைப்பற்று வலக் கல்வி அலுவலகத்திற்கு வருகை தந்த கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மானமும், கிராமியமின்சாரம் மற்றும் நீர்வழங்கள் அமைச்சரான கௌரவ எம்.எஸ். உதுமாலெவ்வையிடம் கிழக்கிலங்கை ஆசிரிய ஆலோசகர் ஒன்றியம் சார்பாக அதன் தலைவர் ஐ.எல்.எம். இப்றாகீம் கிழக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர்களது பிரச்சினைகள் சம்பந்தமான மகஜர் ஒன்றினைக் கையளித்தார்.
இது சம்பந்தமாக தெரிவித்த ஆசிரிய ஆலோசகர் இப்றாகீம்,,
'கடந்த காலத்திலிருந்து இன்றுவரை ஆசிரிய சேவையிலுள்ள ஆசிரிய ஆலோசகர்களது பணி மிகவும் கஷ்;டமானது நீண்ட தூரப்பாடசாலைகளுக்கும் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் அவர்களுக்கான விசேட கொடுப்பனவு குறைவாகவே கிடைக்கிறது. ஏனைய மாகாணங்களில் இக்கொடுப்பனவு அதிகமாகவுள்ளது. இதுசம்பந்தமாக அண்மையில் எமது அமைப்பு கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் கோரிக்கை முன்வைத்து கடிதமொன்றையும் அனுப்பியுள்ளது.
அதன் பிரகாரம் கௌரவ மாகாண அமைச்சருக்கும் இதுசம்பந்தமான அறிக்கை தற்போது கையளிக்கப்பட்டுள்ளது. விசேட கொடுப்பனவு அதிகரிக்கப்படல், ஆசிரியர்களுக்குள்ளதுபோல் லீவு காலங்களிலும், விசேட லீவு காலங்களிலும் லீவு வழங்குதல் போன்றன அடங்கிய கோரிக்கை அடங்கிய மகஜர் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது'
இதுசம்பந்தமாக கருத்துத் தெரிவித்த மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை,,
விரைவில் இதுசம்பந்தமாக கிழக்கு மாகாண முதலமைச்சருடனும், அமைச்சரவையுடனும் கலந்தாலோசித்து உடன் நடவடிக்கை எடுப்பதற்கான திட்டங்களை மேற்கொள்வதாக தெரிவித்தார். அமைச்சரின் வருகையின்போது அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்சேஹ் ஏ.எல்.எம் காசீம், பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.அகமது கியாஸ், அமைச்சரின் இணைப்பாளர் ஏ.பி.தாவூது, உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அதிபர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment