யாழ் முஸ்லிம் இணையம் பக்கச்சார்பின்றி செயற்படுகிறது - அமைச்சர் றிசாத் பாராட்டு
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
ஒரு சமூகம் தமது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் அது பல் துறைகளில் தமது தடங்களை பதிக்க வேண்டும் என தெரிவித்துள்ள அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன், இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேசம் அறியச் செய்வதுடன்,சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளின் வெளிப்பாடுகளை இலங்கை முஸ்லிம்கள் அறிந்து கொள்ளும் உயர் பணியினை யாழ் முஸ்லிம் இணையத்தளம் செய்து வருவது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
யாழ் முஸ்லிம் இணையத்தளத்தின் இரண்டாவது ஆண்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் குறிப்பி்ட்டுள்ளதாவது,
இன்று முஸ்லிம் சமூகம் தமக்கான தினசரி ஊடகமொன்றில்லாத நிலையில் வேதனைப்பட்டு கொண்டிருக்கும் தருனமொன்றில் யாழ் முஸ்லிம் இணையத்தளம் தோற்றம் பெற்று தனது கரடு முரடான பாதையினை கடந்துள்ளது. எமது முஸ்லிம் சமூகத்தின் நியாயமான கோறிக்கைள் மற்றும் உரிமைகள் மற்றும் குரல்களை அரசியல் வாதி்கள் என்ற வகையில் நாங்கள் முன் வைக்கும் போது, அது சர்வதேசத்துக்கு உரிய முறையில் செல்வதில்லை.
சில ஊடகங்கள் வருமானத்தையும்,அவர்களது ஊடக நிறுவனத்தின் நிகழ்ச்சி நிரல்களை மட்டுமே நோக்காக கொண்டு செயற்படுகின்றன. இவ்வாறான நி்லையில் பக்கசார்பின்றி சகலரது செய்திகளையும்,ஆக்கங்களையும்,காலத்தின் தேவையுணர்ந்து துணிந்து பிரசுரம் செய்யும் பணியிணை யாழ் இணையத்தளம் செய்து வருவதுடன்,குறுகிய 2 வருடத்துக்குள் பல இலட்ச வாசகர்களை தன்னகத்தே கொண்ட தமிழ் பேசும் வாசகர்களை கொண்ட இணையமாக யாழ் முஸ்லிம் பிரகாசித்துள்ளமை பாராட்டத்தக்கது.
தொடர்ந்தும் யாழ் முஸ்லிம் இணையத்தளம் தமது சமூகப் பணியினை ஆற்ற பிரார்த்திப்பதுடன்,அதனது பிரதம ஆசிரியர்,மற்றும் செய்திகளை வழங்கும் செய்தியளார்கள் உள்ளிட்ட யாழ் இணைய வாசகர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் என்றும் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் யாழ் இணையத்துக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment