Header Ads



பேரணி செல்வதால் மாத்திரம் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது - ரணில்


பேரணி செல்வதன் மூலம் தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்துள்ளார். கண்டியில் இடம் பெற்ற ஐக்கிய தேசிய கட்சியி;ன் மாவட்ட செயற்பாட்டாளர்களின் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

பேரணி செல்வதன் மூலம் எதனையும் செய்து விட முடியாது. எமது இலக்கு 2 ஆயிரத்து 14 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல்களை நடத்தி எம்மை களைப்படைய செய்து பொதுத்தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளனர்.

 2 ஆயிரத்து 14 ஆம் ஆண்டை இலக்காக கொண்டே நாங்கள் மாகாண சபை தேர்தல்களுக்கு முகங் கொடுக்கின்றோம் என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்துள்ளார். (Sfm)

No comments

Powered by Blogger.