Header Ads



அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவருவது ஜனநாயக உரிமை!


(எம்.ஜே.எம். தாஜுதீன்)

13 ஆவது திருத்தச் சட்டம் என்பது எமது நாட்டின் அரசிலமைப்புச் சட்டமாகும்.  அதனை மதித்து நடப்பதாக நாம் சத்தியப்பிரமாணம் செய்துள்ளோம். ஆனால் அதில் நாட்டு மக்களின் நலனுக்கா மாற்றம் செய்யும் அதிகாரம் ஜனநாயகத்துக்கு உட்பட்டதாகும் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

தகவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்:

பொதுவாக உலக நாடுகளில் அரசியலபை;புச் சட்டங்கள் நாட்டு மக்களின் தேவைகளுக்கு ஏற்றவகையில் அடிக்கடி மாற்றம் செய்யப்படுகின்றது. வல்லரசு நாடுகளான அமெரக்காவிலும் இந்த நிலை உள்ளது. மிகப் பெரும் ஜனநாகய நாடான இந்தியாவில்;;;;கூட 200 முறைகள் அந்த நாட்டின் அரசியலமைப்பு முறைகள் மாற்றப்பட்டுள்ளன.

அதே நேரம் பொது மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்துக்கு வந்தவர்களுக்கு இந்த அரசியலமைப்பு தொடர்பில் தமது கருத்தனை முன்வைக்க ஜனநாயக ரீதியில் பூரண உரிமையும் இருக்கின்றது. அதனை எவரும் மறுக்க முடியாது.

நாட்டின் தேசியப் பிரச்சினையைக் தீரக்கும் முகமாக 13 ஆம் திருத்தத்துக்கும் அப்பால் சென்று செனட் சபை அமைப்பதன்மூலம் மேலதிக அதிகாரம் வழங்கவும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புது டில்லியில் வைத்துக் கூறியபோது நான் அருகில்தான் இருந்தேன் என்றும் அமைச்சர் கூறினார். 

No comments

Powered by Blogger.