Header Ads



அப்பிளும், கிறிஸ்த்தவ மதவாதிகளும்..!


(கோடாங்கி)

ஆப்பிள் நிறுவனத்தை இன்று உலகம் முழுவதும் அறியாதவர்களே கிடையாது எனலாம். கடந்த ஐந்தாண்டுகளில் அவர்கள் உலகின் மூளை முடுக்கு எல்லாம் சென்றடைந்துவிட்டனர். ஐபோன், ஐபாட், ஐபோட், மாக் மடிக் கணனி என அனைத்தும் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதெல்லாம் தெரிந்தது தானே என்று நினைக்கின்றீர்களா. 

இனி சொல்லப் போகும் செய்தியைக் கேட்டால் தான் நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக வேண்டி இருக்கும். ஆப்பிள் நிறுவனத்தின் சின்னம் நாம் அனைவரும் அறிவோம் அல்லவா, அதாவது கடித்த ஆப்பிள் பழத்தை இத்த உருவம் கொண்டிருக்கும். இந்தச் சின்னம் ஆதாம், ஏவாள் புனைவுக் கதையில் வருவதைப் போல இருப்பதாகவும், பாவத்தின் சின்னமாக இருப்பதாகவும் கூறி ரசியாவின் கிருத்தவ மதவாதிகள் கூறியுள்ளனர். 

இந்தச் சின்னமானது தமது மத நம்பிக்கையைப் புண்படுத்துவதாகவும், மதவசையாகவும் கருதுவதாக அவர்கள் மேலும் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்கள். அதனால் அந்தச் சின்னத்தை மாற்றிவிட்டு குருசின் சின்னமாக வைக்கும் படி சிலர் கூறி வருகின்றார்கள். 

ஆப்பிள் நிறுவனத்தின் படி இந்தச் சின்னமானது பிரபல கணித மேதையும், வானவியலாளருமான ஐசக் நியுட்டனை நினைவுப்படுத்தவே வைக்கப்பட்டு இருப்பதாக அறிய முடிகின்றது. ஆனால் மதவாதிகளின் கூற்றோ நகைப்பினை ஏற்படுத்துகின்றது. 

இந்தக் கிருத்தவ மதவாதிகள் ஒரு வடிக் கட்டின முட்டாள்கள் என்பதை நாம் எளிதில் கூறிவிடலாம். ஆதாம், ஏவாள் கதை என்பது ஒரு புனைவு என்பதை நாம் நன்கு அறிவோம், ஆனால் அந்தக் கதையைக் கூட அரைக் குறையாகப் படித்துவிட்டுச் சமூகத்தில் உளறிக் கொட்டுவது தான் இவர்கள் பிழைப்பு என்பதை நிரூபித்துவிட்டார்கள். 

நிற்க, ரசியாவில் அண்மையக் காலமாக இருண்டக் காலத்துக்குத் திரும்பிக் கொண்டிருப்பதை அங்கிருந்து வரும் செய்திகள் உறுதிப் படுத்துகின்றன. பெண்ணியப் போராளிகள் பலரை மதவசை சட்டத்தில் உள்ளே தள்ளியும், அதிபர் புதினை எதிர்ப்பவர்களை இல்லாமல் செய்தும் வருகின்றனர். இந்தக் கொடுங்கோன்மைக்கு உற்றத் துணையாக இரசியாவின் ஆச்சாரக் கிறித்தவ மதவாதிகள் துணைப் போகின்றனர். அதற்குக் கூலியாகப் புதிய மதவசை தடுப்புச் சட்டம் ஒன்றையும் ரசிய அரசு கொண்டு வரவுள்ளது. அந்தச் சட்டம் நிறைவேறுமானால் ஆப்பிள் நிறுவனம் தமது சின்னத்தை ரசியாவில் பயன்படுத்த முடியாமல் போகலாம். 

ரசியாவின் அரசாங்கத்தில் மதவாதிகளின் தலையீட்டை கடுமையாக எதிர்த்து வருகின்றது ரசியக் கட்சியான யாப்லோகோ. இதில் என்ன ஒற்றுமை என்றால் யாப்லோகோ என்பதும் இரசிய மொழியில் ஆப்பிள் தானாம். 

இறுதிக்கு வருவோம், ஆப்பிள் சின்னம் பாவத்தின் குறியீடு எனவும், அது மத நம்பிக்கையைப் புண்படுத்துவதாக விளம்பும் மதவாத கூட்டம் உண்மையில் விவிலியத்தை ஒருபோதும் படித்திருக்கவில்லை என்றே நான் சொல்வேன். விவிலியத்தின் எந்தப் பகுதியிலாவது ஆதாம், ஏவாள் உண்ட கனி ஆப்பிள் தான் எனக் குறிப்பிட்டுள்ளதா, அதனை நிரூபிக்க முடியுமா. மங்கி வரும் தமது மவுசை மக்களிடம் தக்க வைக்க அவ்வப் போது எதாவது ஒரு செயலை செய்து செய்திகளில் இடம் பெறுவது தான் இந்த மதவாதிகள் செயலாகும்.

2 comments:

  1. hik hik its funny man....

    ReplyDelete
  2. கிறிஸ்தவத்தைக் குறை சொல்லி எழுதுகிறார்கள் என்பதற்காக எதனை வேண்டுமானாலும் பிரசுரிக்க முடியுமா? இதனை எழுதியவர் ஒரு நாஸ்திகராக இருக்க வேண்டும்.

    இக்கட்டுரை இஸ்லாத்தின் கருத்துக்களையும் தாக்கியுள்ளது என்பதனை புரிந்து கொள்ளுங்கள். "ஆதாம் ஏவாள் கதை என்பது புனைவு என்பதை நாம் நன்கு அறிவோம்" என்ற வார்த்தைகளை எப்படி சரி காண்பது? இது இஸ்லாத்தையும் தாக்குவதாக உள்ளது.

    அடுத்து, அப்பில் நிறுவனத்தின் சின்னம் நியூட்டனின் அப்பிளை நினைவு படுத்துகின்றது என்பதை நம்புவது கடினம், கீழே விழும் அப்பிளுக்கும், கடிக்கப்பட்ட அப்பிளுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.