Header Ads



அமைச்சர் மைத்திரியின் வேதனை..!


"எனது தம்பியைக் கைதுசெய்ய வேண்டும் என்று பொலிஸாருக்கு உத்தரவிட்டது நானே. எனது அரசியல் வாழ்வில் இரு தலைவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் நம்பிக்கையை வென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகப் பதவி வகிக்கின்றமை நான் முன் ஜென்மத்தில் செய்த புண்ணியம். ஆனால், இப்படியொரு தம்பி எனக்குக் கிடைத்தது அதே ஜென்மத்தில் நான் செய்த பாவம்''

இவ்வாறு கவலை வெளியிட்டார் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

உலகின் பிரபலமான மனிதரான அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சகோதரன் பற்றிய கருத்துகள் கடந்த காலங்களில் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. அவருடைய தம்பி ஒரு போதைவஸ்துப் பாவனையாளர். ஒரு பலகை வீட்டிலேயே அவர் இருக்கின்றார். ஒரு பிரபலமான நபரின் தம்பிதான் இவர். ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படியான ஒருவர் இருக்கின்றார். 

எனது தம்பி வனவிலங்கு திணைக்கள அதிகாரியின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்று தெரிந்தவுடன் அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது நானே. 

மேற்படி சம்பவத்தை அறிந்தவுடன் எனது தம்பியை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று நான் பொலிஸாருக்கு உத்தரவிட்டது மட்டுமன்றி, எக்காரணத்தைக் கொண்டும் அவரைப் பிணையில் விடுதலை செய்யக்கூடாது என்றும் கூறினேன்.

எனது தம்பி தவறு செய்தால் அவருக்கும் என்னிடத்தில் மன்னிப்பு இல்லை. எனது தம்பியைக் கைதுசெய்த விடயம் மட்டுமே ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டதே தவிர, நான் கூறியவை ஒன்றும் வெளிப்படுத்தப்படவில்லை. என்றார்.

No comments

Powered by Blogger.