'வெறுப்பை தூண்டும் ஆடைகளை அணியாதீர்கள்' - இஸ்லாத்தை ஏற்ற பெண் உபதேசம்
அரைக்குறை ஆடையுடன் இரவு விடுதிகளில் நடனமாடிய பிரிட்டனைச் சார்ந்த ஹீதர் மாத்யூஸ் என்ற 27 வயது பெண்மணி, இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட பின் அதன் மூலம் கிடைத்துவரும் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.
இதுவரை கிடைக்காத மகிழ்ச்சியும், பாதுகாப்பும், அன்பும் முஸ்லிமாக மாறி பர்தா அணிந்து தலையை மறைக்க துவங்கியவுடன் கிடைப்பதாக பிரிஸ்டன் நகரைச் சார்ந்த மாத்யூஸ் கூறுகிறார். 2 பெண் குழந்தைகளுக்கு அன்னையான ஹீதர் மாத்யூஸ், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இஸ்லாத்தை தழுவியிருந்தார்.
முன்னர் மாத்யூஸின் கணவர் இஸ்லாத்தை தழுவியிருந்தார். இதனைத் தொடர்ந்து தனது கணவரை எதிர்ப்பதற்காக குறைகளை கண்டுபிடிக்கும் நோக்கில் இஸ்லாத்தை ஆராயத் துவங்கினார். கடந்த ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இருப்பினும், ஹீதர் மாத்யூஸ் தனது ஆய்வை தொடர்ந்தார். குறைகளை ஆராயத்துவங்கிய ஹீதர் மாத்யூஸின் உள்ளத்தில் இறைவன் ஹிதாயத் என்னும் நேர்வழியை விதைத்தான். விளைவு, தனது பாவக்கறைகளை கழுவிவிட்டு இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்கும் முடிவுக்கு வந்தார் அவர்.
பின்னர் அருகிலுள்ள மஸ்ஜிதின் இமாமை இஸ்லாத்தை தழுவ அணுகினார். தனது பிள்ளைகளை இஸ்லாத்தை தழுவ நிர்பந்திக்கமாட்டேன் என்று ஹீதர் மாத்யூஸ் கூறுகிறார். அவர்கள் இஸ்லாத்தை படித்து ஆய்வு செய்த பிறகு வரட்டும் என்பது மாத்யூஸின் நிலைப்பாடு. ஆபாசமான தனது முந்தைய புகைப்படங்களை காணும்பொழுது வெட்கம் தோன்றியதாக கூறும் ஹீதர் மாத்யூஸ் மேலும் கூறியது:”பிறருக்கு வெறுப்பை தூண்டும் ஆடைகளை அணியாதீர்கள். குறிப்பாக ஆண்களை தவறான வழியில் சிந்திக்க தூண்டும் வாய்ப்பை பெண்கள், அவர்கள் அணியும் ஆடை மூலமாக அளித்துவிடக்கூடாது.
இஸ்லாம் பாதுகாப்பான ஆடையை அணிய சொல்கிறது. பைத்தியக்காரத்தனமான உணர்வு அல்ல. அன்புதான் முக்கியம் என்பதை இஸ்லாம் எனக்கு கற்பித்தது.” இவ்வாறு ஹீதர் மாத்யூஸ் கூறியுள்ளார். அனைத்து மத நம்பிக்கையாளர்களும் அடங்கிய ஃபைத் மேட்டர்ஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், ஹீதர் மாத்யூஸ் போன்ற இஸ்லாத்தை தழுவியவர்கள் குறித்தும், அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கான காரணங்கள் குறித்தும் தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பிரிட்டனில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். இதில் 3-ல் 2 பேர் 27 வயதிற்கு கீழ் உள்ள பெண்கள் ஆவர். thoothu
Post a Comment