Header Ads



ஈரான் அணுவாயுதம் தயாரிக்க ஒருபோதும் அனுமதியேன் - ஒபாமா சபதம்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தான் பதவியில் நீடிக்கும் வரை ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி பூண்டுள்ளார்.

“நான் அமெரிக்காவின் அதிபராக இருக்கும் வரையில் ஈரானுக்கு ஒரு அணு ஆயுதம் கூட கிடைக்க விடமாட்டேன்” என்று பராக் ஒபாமா கூறினார். மேலும், இஸ்ரேல் தங்களுடைய உண்மையான நண்பன் என்றும், தங்களுடைய பகுதியின் மிகப் பெரிய நட்பு நாடு என்றும்  கூறி தன் இஸ்ரேலிய பாசத்தை வெளிப்படுத்தினார்.

இஸ்ரேல் தாக்கப்பட்டால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு தோள் கொடுக்கும் தோழனாகத் திகழும் என்பதை  தான் அதிபர் ஆன காலம் முதல் தெளிவு படுத்தி உள்ளதாக ஒபாமா கூறினார்.
  

No comments

Powered by Blogger.