இன்றைய பிரச்சினைகளுக்கு பல்கலைக்கழக கட்டமைப்பு குறைபாடுகளே காரணம் - எஸ்.பி.
ஜே.எம்.ஹபீஸ்
சுதந்திரத்தின்பின் அரசியல் தலைவர்கள் எவரையும் பல்கலைக்கழகங்களுக்குள் பிரவேசிக்க மாணவர்கள் அனுமதிக்க வில்லை. அந்நிலை என்னால் மாற்றப்பட்டு விட்டது என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.
(2012 09 30 மாலை) கட்டுகஸ்தோட்டையில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புற பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்குப் புதிய உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் ஸ்ரீ ல.சு.க. கிளை ஒன்றை ஸ்தாபித்தல் என்பவை தொடர்பாக இடம் பெற்ற இக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளே இன்றைய பிரச்சினைக்குக் காரணமாக அமைந்துள்ளதே தவிர விரிவுரையாளர்களது சம்பளப்பிரச்சினை அல்ல என்றும் அவர் கூறினார்.
சுதந்திரத்திற்கு பின் எந்த ஒரு தலைவரையும் பல்கலை கழகங்களுக்கு செல்வதற்கு மாணவர்கள் இடம் அளிக்கவில்லை. எஸ்.டப்ளியூ ஆர்.டி.பண்டாநாயக்கா, டட்லி சேனாநாயக்கா, ஜே.ஆர். ஜயவர்தன, ஆர் பிரேமதாச, டி.பி.விஜெதுங்க , சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஆகிய எந்த ஒரு தலைவரையும் பலகலைகழகங்களுக்குள் செல்ல மாணவர்கள் அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு பல தொல்லைகளைச் செய்தனர். ஐ.எம்.ஆர்.ஈரியகொல்ல, யூ.பீ.வன்னிநாயக்க, ஏ.சி.எஸ்.ஹமீட் லலித் அதுலத்முதலி போண்ற எந்த ஒரு உயர் கல்வி அமைச்சரையும் பல்கலைகழகங்களுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. கல்லலால் அடித்தனர். ஆர்ப்பாட்டங்களை நடாத்தினர். நான் உயர் கல்வி அமைச்சர் என்ற முறையில் இன் நிலையை மாற்றினேன். பல முறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பல்கலை கழகங்களுக்கு அழைத்துச் சென்றேன். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பலரை சேவை இடை நிறுத்தம் அசய்தேன். இவ்வாறான மாற்றங்களை செய்ததன் காரணமாகவே இப்படியான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். பல்கலைகழக ஆசிரியர்களது சம்பளம் பல முறை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண சபை உற்பட மூன்று மாகாண சபைகள் டிசம்பர் மாதம் கலைக்கப்பட்டு அடுத்;த வருடம் ஆரம்பத்தில் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதில் ஆளும் கட்யே பாரிய வெற்றியை பெற்றுக் கொள்ளும். அதன் பின் 2013 ம் ஆண்டில் நாட்டின் மற்றைய மாகாணங் களிலும் தேர்தல்களை நடாத்திய பின் 2014 ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடாத்தும் வாய்ப்பு உண்டு என்றும் அமைச்சர் திஸாநாயக்க இங்கு தெரிவித்தார்.
Post a Comment