Header Ads



மஹிந்தவை புகழும் அஸ்வர் எம்.பி. அநுராதபுர பள்ளி தீயிடப்பட்டதற்கு பதில் சொல்லட்டும்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாமத்தை உச்சரித்தால் சகல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ள அஸ்வர் எம்.பி, அநுராதபுரத்தில் அரபு மத்ரஸா மீது தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்கு பதிலளிக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

'மஹிந்தவின் நாமத்தை உச்சரித்தால் சகல பிரச்சினைகளும் தீரும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஹாஜியார் சபையில் சொன்னாலும் சொன்னார், அவர் சொல்லி வாய் மூடும் முன் அநுராதபுரம் மல்வத்து ஓய பகுதியில் அமைந்துள்ள அரபு மத்ரஸா ஒன்றிற்கு இனவாதிகள் தீ வைத்து விட்டார்கள். அதிலும் இஸ்லாமிய சகோதர்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் கால கட்டத்தில் பெருநாள் பரிசு என இதை செய்து தந்துள்ளார்கள். நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் அவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். 

கருணையையும், அன்பையும், அஹிம்சையையும் போதிக்கும் பௌத்த மதம் தற்போது இல்லை. சிங்கள பௌத்தம் இலங்கையில் புதிதாக வேரூன்றி வளர்ந்து வரும் மதம். இது இந்த அரசாங்கம், ஆட்சிக்கு வந்தபின்னரே பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை அஸ்வர் எம்.பி உட்பட அரசாங்கத்தில் உள்ள அனைத்து தமிழ் பேசும் எம்.பி.க்களும் நன்கறிவர். 

இந்த புதிய மதம்தான், நாடு முழுக்க இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத வணக்க ஸ்தலங்களை தாக்கி அழிக்கின்றது என்பது இன்று சிறு குழந்தையும் அறிந்துள்ள உண்மை.   

இந்த மதவாதிகள் அரசாங்கத்துக்கு உள்ளேதான் இருக்கிறார்கள். அல்லது அரசாங்கத்தை சார்ந்து இருக்கிறார்கள். வெளியே இல்லை. இத்தகைய  சம்பவங்கள் இப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றை நாம் எதிர்த்து நிறுத்த வேண்டும். அல்லது எங்கள் மதங்களை நாம் மாற்றிக்கொள்ள வேண்டி வரும். கோவிலுக்கும், பள்ளிக்கும் தேவாலயங்களுக்கும் போவதற்குகூட, நாம் எழுத்து மூலம் அனுமதி பெற வேண்டிய நாள் வரலாம்.   

எனவே, இந்த இன - மத வாதத்தை வந்த பின் அல்ல, வரும்போது அல்ல, வருமுன், அனைத்து மனிதநேய சக்திகளும் எதிர்த்து நிற்க வேண்டும். எங்களுடன் சேர்ந்து எதிர்க்க முடியாவிட்டால், அஸ்வர் எம்பி போன்றவர்கள் உள்ளே இருந்தபடியாவது எதிர்க்க வேண்டும்.

 தமது தலைவரை அஸ்வர் எம்பி வானளாவ புகழ்வதில் எமக்கு ஆட்சேபனை எதுவும் கிடையாது. அது அவரது கடமையாக இருக்கலாம். ஆனால், அவருக்கு தனது சமூகத்தை நோக்கிய கடைமையும் இருக்கிறது. எனவே அஸ்வர் எம்பி போன்ற தமிழ் பேசும் எம்.பி.க்கள், தமது தலைவரை புகழ் பாடுவதுடன் சேர்த்து இந்த இன - மத தீய சக்திகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்படியும், அவருக்கு எடுத்து சொல்ல வேண்டும்.'

2 comments:

  1. மனோ சார் மனித நேயத்துடன் நீங்கள் துனிச்சலாக முனெடுத்துச் செல்லும் இந்த அரசியல் பனிக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
    வெட்கம்..!! வெட்டகம்..!!! இந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒரு நியாயமான கன்டன அறிக்கை விடுவதற்கே திரானியற்றவர்கள். கோளைகள், தன்மானம் இழந்து தலைகுனிந்து நிற்கும் சுய நல கும்பல்கள். பாவம் முஸ்லிம் மக்கள்.

    ReplyDelete
  2. எங்கட வேலை யை நாங்கள் பார்க்குறோம் உங்கட வேல யை பாருங்கள் குருவி ,,,மனோவுக்கும் இதுதான் பதில் எங்கட சமூக பிரச்சனை யை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்...

    ReplyDelete

Powered by Blogger.