Header Ads



பாகிஸ்தானில் தேர்தல்


பாகிஸ்தானில் தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. அக் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தார் அதிபராகவும், ராஜா பர்வேஸ் அஷரப் பிரதமராகவும் பதவி வகிக்கின்றனர். இந்த நிலையில் தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் வருகிற மார்ச் 16-ந்தேதி வரை உள்ளது. 

இருந்தாலும் அரசியல் சூழ்நிலை காரணமாக பாராளுமன்றத்தை முன் கூட்டியே கலைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரலில் தேர்தல் எனவே தற்போதைய பாராளுமன்றத்தை வருகிற ஜனவரி 16 அல்லது 17-ந்தேதி கலைக்க அதிபர் சர்தாரியும், பிரதமர் அஷரப்பும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனையும் நடைபெறுகிறது. 

பாகிஸ்தான் அரசியல் சட்டப்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே வருகிற ஏப்ரல் மாதம் 26-ந்தேதி அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

No comments

Powered by Blogger.