பிரிட்டனின் மறுபக்கம்
மருத்துவமனையில், செவிலியர் இல்லாத காரணத்தால், பிரிட்டனை சேர்ந்த ஒரு பெண், கணவர் உதவியுடன், குழந்தை பெற்றெடுத்தார். பிரிட்டனின், ஹில்லிங்டன் பகுதியை சேர்ந்தவர் டேனியல், 36; மனைவி நடாலியா. இவர்களுக்கு, ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது குழந்தையை பெற, அருகில் உள்ள மருத்துவமனையில் நடாலியா சேர்க்கப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன், நடாலியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அந்த நேரத்தில், மருத்துவமனையில், ஒரே ஒரு ஊழியர் தான் இருந்தார். நடாலியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு விட்டதை தெரிவித்த போது, அந்த ஊழியர், செவிலியரை அழைக்க சென்று விட்டார். அந்த நேரத்தில் நடாலியா, கணவர் துணையுடன், ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும், பிரசவத்தின் போது நடாலியாவுக்கு உதவ முடியாதது குறித்து, டாக்டர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.
Post a Comment