லடாய் உறுதியாகிறது..!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீது நம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேணை கொண்டுவரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அரசுக்கு சுமார் 39 கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவரும் இலங்கையின் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவருமான பிரதீப் காரியவசத்துக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
தொடர்புடைய விடயங்கள்துஷ்பிரயோகம், மனித உரிமை, மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை சுதந்திரக் கட்சி உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவர் பிரதீப் காரியவசம் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.
த ஃபினான்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் சுமார் 78 லட்சத்துக்கும் அதிகமான பங்குகளை பிரதீப் காரியவசம் கடந்த ஏப்ரல் மாதம் சட்டத்துக்கு முரணான வகையில் வாங்கியதன்மூலம் அரசுக்கு சுமார் 39 கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
அதுதவிர, ஷான் சண்முகம் என்ற நபரை குறித்த தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராக நியமிக்குமாறு பரிந்துரை செய்ததன் மூலம் பிரதீப் காரியவசம் நாட்டின் லஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டத்தை மீறியுள்ளதாகவும் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்காக பிரதீப் காரியவசத்துக்கு அழைப்பாணை விடுக்குமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் ரஷ்மி சிங்கப்புலி ஏற்றுக்கொண்டார்.
அதன்படி, பிரதீப் காரியவசம் எதிர்வரும் பெப்ரவரி 28-ம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று நீதவான் உத்தரவிட்டார்.
Post a Comment