முதுமானிப் பட்டப்படிப்பை மேற்கொள்பவர்தான் மலாலாவை துப்பாக்கியால் சுட்டவராம்..!
பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசபசாய் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேக நபரை அந்நாட்டு பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். பெண் கல்வி உரிமை குறித்து பிரசாரம் நடத்திய மலாலா தற்போது பிரிட்டனில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் பாகிஸ்தானின் ஸ்வாத் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான அத்தா உல்லாஹ் கான் என்பவரை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரதான சந்தேக நபராக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இரசாயனவியலில் முதுமானிப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் இந்த இளைஞரை பிடிக்க பாக். பொலிஸார் தீவிர சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் பாக். பொலிஸார் 9 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். tn
Post a Comment