இலங்கையிலுள்ள முதியோர் இல்லங்களை மூடிவிடுங்கள் - ஆதிவாசி தலைவர் வேண்டுகோள்
(TM)
இலங்கையிலுள்ள அனைத்து முதியோர் இல்லங்களையும் மூடிவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னியலா அத்தன் தெரிவித்துள்ளார்.
இந்த நாடும் நாட்டின் சமூகங்களும் அபிவிருத்தி கண்டுள்ளன என்று தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், தமது தாய், தந்தையர் முதுமையடைந்ததும் அவர்களை முதியோர் இல்லங்களுக்கு கொண்டுசென்று விடும் பிள்ளைகள் இந்த சமூகத்தில் இருக்கும் பட்சத்தில் இதுவொரு அபிவிருத்தியடைந்த சமூகம் என்று எப்படி கூற முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் எல்லாப் பாகங்களிலும் முதியோர் இல்லங்களை நிர்மாணிப்பதை விட்டுவிட்டு முதியோருக்கு எவ்வாறு மரியாதையளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஆதிவாசிகளின் பரம்பரைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். பரம்பரை பரம்பரையாக நாம் கையாண்டு வந்த வேட்டையாடும் மரபைத் தொடரும் உரிமை எமக்கு தொடர்ந்து இருக்க வேண்டும்.
உலகின் ஏனைய இனத்தவர்களைப் போன்று எமக்கும் வாழும் உரிமை முழுமையாகக் கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment