Header Ads



நாம் பெற்றசுதந்திரமும் நிம்மதியும் நிலைக்கட்டும் - அதாஉல்லா பெருநாள் வாழ்த்து


தேசியகாங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சிமாகாணசபைகள் அமைச்சருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் புனித ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனிதத்துவமிக்க ஹஜ்ஜூப் பெருநாளை நமது நாட்டு முஸ்லிம்களும்,உலகெங்கும் பரந்துவாழும் முஸ்லிம் உம்மத்துகளும் மகிழ்வுடன் இன்று கொண்டாடுகின்றனர்.  அவர்களுக்கு எனது உளம் கனிந்த ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில்; மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகின்றேன். (அல்ஹம்துலில்லாஹ்)

இறை ஆணைக்குகட்டுப்பட்ட ஒருகுடும்பத்தின் மூன்றுதியாகசீலர்களாம் அல்லாஹ்வின் தோழரான நபி இப்றாஹிம் (அலை) அவரின் துணைவியார்; அன்னை ஹாஜரா,தவப்புதல்வன் நபி இஸ்மாயில் (அலை) ஆகியோரின் மாபெரும் தியாகம் நமக்கெல்லாம் படிப்பினையைத் தந்ததோடு உலகம் அழியும் வரையும் இத்தியாகம் நம்மால் நினைவு கூறப்படவேண்டியதுமொன்றாகும். அன்னாரின் தியாகத்திற்கான உயர்ந்தசன்மானமே ஹஜ்ஜூப்பெருநாளாகும். இந்நாளில் முஸ்லிம்களின் வாழ்வில்  தியாகஉணர்வு மென்மேலும் அதிகரிக்கட்டும். 

நமது நாட்டில் இவ்வாறான தினங்களை சந்தோசமாகவும் நிம்மதியாகவும் கொண்டாட முடியாதவரலாறு இருந்தது. அவ்வாறான கரைபடிந்த அத்தியாயம் நீங்கி இன்று நாம் அனைவரும் நிம்மதியுடனும் சந்தோசத்துடனும் இன்றைய தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு சுக்குர் செய்வோமாக! 

முஸ்லிம் நாடுகளில் இஸ்லாத்தின் விரோதசக்திகளால் திட்டமிட்ட பிரிவினைகள் தோற்றுவிக்கப்பட்டு யுத்த சூழ்நிலையிலும் நமது முஸ்லிம் உம்மத்துகள் இன்றைய தினத்திற்கு முகம் கொடுக்கின்றனர். அவர்கள் வாழ்விலும் நிலையான விடிவு ஏற்பட புனிதமிக்க இந் நன்நாளில் நாம் அனைவரும் இருகரமேந்தி பிரார்த்திப்போமாக. 

பல்லினமக்கள் வாழும் நமதுநாட்டில் எல்லா இன மக்களும் ஒற்றுமையோடும் நிம்மதியோடும் வாழ்வதற்கு பிரார்த்திப்பதோடு இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தமுனையும் தீயசக்திகளின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கும் இறைவனிடம் வேண்டுவோமாக. 

ஹஜ் கடமையைநிறைவேற்றுவதற்கு  புனிதமக்காசென்றுள்ள ஹஜ்யாஜ்களின் ஹஜ் கடமை அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுடைய பிரார்த்தனைகள் நிறைவேறுவதற்கும் பிரார்த்திப்போமாக. ஆமீன் ..........

ஏ.எல்.எம். அதாஉல்லா (பா.உ)
தலைவர் - தேசிய காங்கிரஸ்  
உள்ளுராட்சிமாகாணசபைகள் அமைச்சர் 



No comments

Powered by Blogger.