ஜிஹாத் அமைப்புகளுக்கு ஆயுதம் விநியோகிக்கும் அமெரிக்கா
(WSWS)
பஷர் அல்-அசாத் ஆட்சியை அகற்றுவதற்கு சிரியாவிற்கு அனுப்பப்படும் ஆயுதங்களில் பெரும்பாலானவை அல் குவேடா இன்னும் அதேபோன்ற கருத்துடைய இஸ்லாமிய அடிப்படைவாத போராளிகளுடைய கரங்களுக்குச் செல்கின்றன என்பதை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் ஒப்புக் கொள்கின்றனர்.
திங்களன்று நியூ யோர்க் டைம்ஸில் வந்துள்ள பிரதான கட்டுரை, ஜிஹாதியக்கூறுகள் பெருகிய முறையில் முக்கிய பங்கை கொண்டு சிரியாவை ஒரு குறுகிய உள்நாட்டு போராக மாறிவிட்டது என அறிக்கைகள் உறுதிப்படுத்துகிறது என தெரிவிக்கிறது.
“சௌதி அரேபியா மற்றும் கட்டார் வேண்டுகோளின்படி பஷர் அல் அசாத் அரசாங்கத்திற்கு எதிராகப் போரிடும் சிரிய எழுச்சிக் குழுக்களுக்கு அளிக்கப்படும் ஆயுதங்களில் பெரும்பாலானவை கடினப் போக்கு உடைய இஸ்லாமிய ஜிஹாதிஸ்ட்டுக்களை அடைகின்றன, மதசார்பற்ற எதிர்த்தரப்புக் குழுக்கள் என்று மேற்கு ஏற்றம் கொடுக்க விரும்பும் குழுக்களுக்கு அல்ல என்று அமெரிக்க அதிகாரிகளும் மத்திய கிழக்கு தூதர்களும் கூறுகின்றனர்” என்று டைம்ஸ் தகவல் கொடுத்துள்ளது.
அக்கட்டுரை சிரியாவில், இன்னும் பரந்த முறையில் மத்திய கிழக்கில், ஒபாமா நிர்வாகத்தின் மூலோபாயம் குறித்து அமெரிக்க ஆளும் வட்டங்களின் பெருகும் அமைதியின்மையை பிரதிபலிப்பதுடன், தேர்தல்களுக்கு மூன்று வாரங்களே இருக்கையில் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி எதிர்கொள்ளும் வெளியுறவுக் கொள்கை நெருக்கடி ஆழ்ந்து போவதற்கும் எரியூட்டுகிறது.
ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்யினருக்கும் இடையே நடக்கும் உருக்குலைந்த பொது விவாதத்தில் இந்த நெருக்கடி, அமெரிக்கத் தூதரகம் மற்றும் கிழக்கு லிபிய நகரமான பெங்காசியில் இரகசிய CIA தலைமையகம் ஒன்றின்மீதும் செப்டம்பர் 11 நடந்த தாக்குதலை மையமாகக் கொண்டது; இத்தாக்குதல் அமெரிக்கத் தூதர் ஜே.கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ், இன்னும் மூன்று அமெரிக்கர்கள் உயிர்களைக் கவர்ந்தது.
குடியரசுக் கட்சியினர் பெருகிய முறையில் ஆக்கிரோஷ பகிரங்க பிரச்சாரத்தை தொடக்கி, ஒபாமா நிர்வாகம் அமெரிக்கர்களை பாதுகாப்பதில் தோல்வியுற்றதற்கு அதன்மீது குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். வெள்ளை மாளிகை நிகழ்வின் தன்மையை மூடிமறைக்கிது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்; வெள்ளைமாளிகை முதலில் இந்நிகழ்வை இஸ்லாமிய எதிர்ப்பு வீடியோவிற்கு எதிரான ஒரு தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டம் எனக்காட்டியது; பின்னர் அது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று கூறப்பட்டது.
ஞாயிறு தொலைக்காட்சிப் பேட்டிகளில், குடியரசுக் கட்சி இவ்வகைத் தாக்குதலுக்கு அழுத்தம் கொடுத்தது; அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சியினர் இது ஒரு அரசியல் “சூனிய வேட்டை” என்று பதில் கொடுத்து, முதல் விவரிப்பு அப்பொழுது கிடைத்த உளவுத்துறைச் செய்தியைத் தளமாகக் கொண்டிருந்தது எனக்கூறியது.
குடியரசுக் கட்சி செனட்டர் Lindsey Graham, NBC News நிகழ்வான “Face the NATION” ல் தோன்றி பெங்காசியில் உயிர்களைப் பறித்த தாக்குதல் பற்றிய விவரம் ஒரு தன்னெழுச்சி நிகழ்வு என்பது அரசியல் உந்துதலைக் கொண்டுள்ளது என்றார். ஒபாமாவின் மறுதேர்தல் பிரச்சாரம் “அல்குவேடா அகற்றப்பட்டுவிட்டது என்ற விளக்கத்தை விற்க முயல்கிறது, நம் தூதரகம் அல் குவேடா செயலர்களால் தாக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்வது அத்தகைய கூற்றை இல்லை எனச் செய்கிறது” என்றார்.
ஆனால் இங்கு சம்பந்தப்பட்டது, ஒரு தேர்தல் பிரச்சாரத்தின்போது “கூறப்படும்” கோளாறு என்பது மட்டுமல்ல. பெங்காசி நிகழ்வுகள் லிபியா மற்றும் சிரியா இரண்டிலுமே முழு அமெரிக்கக் கொள்கை தகர்க்கப்பட்டு, இப்பிராந்தியத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டு விட்டது என்பதுதான்.
அமெரிக்கத் தூதரகம் மற்றும் பெங்காசியில் CIA புறச்சாவடியையும் தாக்கிய சக்திகள் அல்குவேடாவுடன் பிணைப்புடைய சக்திகள் என்பது மட்டும் இல்லாமல், வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் ஆயுதம் கொடுத்து ஓராண்டிற்கு முன் லிபியத் தலைவர் முயம்மர் கடாபி மிருகத்தனமாகக் கொலை செய்யப்பட்டதில் முடிந்த ஆட்சி மாற்றத்திற்கான பிரச்சாரத்திற்கு நடந்த தீவிரப் போரில் ஆதரவும் கொடுத்த சக்திகள்தான்.
இந்த ஏழுமாத காலப் போரின் தொடக்கத்திலேயே பெங்காசிக்கு அனுப்பி வைக்கப்பட்ட தூதர் ஸ்டீவன்ஸ், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் வாஷிங்டன் முன்பு “பயங்கரவாதிகள்” என்று முத்திரையிட்டு சித்திரவதை, கடத்தல், குவண்டநாமோவுக்கு அனுப்பி வைத்த சக்திகள் தனியபர்களுக்கும் இடையே இழிந்த உடன்பாட்டைக் கொண்டு வந்த முக்கிய நபர் ஆவார்.
வாஷிங்டனுக்கும் இச்சக்திகளுக்கும் இடையேயுள்ள இந்த உறவு, 1980 களில் முஜாஹிதீன் மற்றும் அல்குவேடாவுடனும் கூட இணைந்து, சோவியத் இராணுவத்தின் குருதியைக் கொட்டுவதற்காக மாஸ்கோவுடன் பிணைந்திருந்த ஆப்கானிய ஆட்சியை அகற்றவதற்காக CIA வளர்த்திருந்த போரில் இருந்த இதேபோன்ற தன்மை நிலவியிருந்ததைத்தான் எதிரொலிக்கிறது.
ஆப்கானிஸ்தானை போலவே, லிபிய ஏற்பாடும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு “பின்னடைவிற்கு” வகை செய்துள்ளது. நேட்டோ வான் தாக்குதல்களைத் தொடர்ந்து கடாபியை வேட்டையாடுவதில் இஸ்லாமியப் போராளிகளைப் பயன்படுத்தியபின், இந்த இலக்கு அடையப்பட்டவுடன் வாஷிங்டன் அவற்றை ஒதுக்கி வைத்து CIA உடைய நம்பிக்கைக்குரிய சொத்துக்களையும் பெருநிறுவனங்களையும் நாட்டின் ஆட்சியாளர்கள் பதவியில் இருத்த முற்பட்டது. போரின் கொள்ளையில் இருந்து ஒதுக்கப்படுவதை எதிர்த்த இந்த இஸ்லாமிய அடிப்படைவாதப்பிரிவுகள், இன்னும் நிறைய ஆயுதஙகள் வைத்திருந்த நிலையில், ஸ்டீவன்ஸைப் படுகொலை செய்தல் என்பதை அமைத்த அளவில் பதிலடி கொடுத்தன.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமெரிக்க வெளியறவுக் கொள்கையின் கருத்தியல் மையத் தானத்தில் இருந்த “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” எனப்பட்டதை மோசடி என்று அம்பலப்படுத்தாமல் ஒபாமா நிர்வாகம் பகிரங்கமாக இந்த நிகழ்வுகளின் மாற்றத்தை விளக்க முடியாது; லிபியாவில் அமெரிக்கத் தலையீட்டிற்காக நடத்தப்பட்ட போர்கள் “மனிதாபிமானத்திற்காக”, “ஜனநாயக உந்துதல்களுக்காக” என்றெல்லாம் கூறப்பட்டது.
மேலும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அதன் விருப்பத்தைத் தொடர்வதற்கு அதே சக்திகளைத்தான் இது பயன்படுத்தியுள்ளது: இதையொட்டி ஈரான் வலிமை இழக்கப்படுவதற்கும் அமெரிக்க-இஸ்ரேலியப் போர் அதற்கு எதிராக நடத்தப்படுவதையும் இலக்காகக் கொண்டுள்ளது. டைம்ஸ் கட்டுரை குறிப்பிட்டுக் காட்டுவது போல் இன்னும் புதிய “பதிலடி வகை” தயாரிக்கப்படுகிறது.
பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரி, அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடிப்புக்களை நன்கு அறிந்தவர்ஒருவர், ‘எதிர்க்குழுக்கள், பெரும் ஆபத்தான உதவிகளைப் பெற்றுவருபவை நாம் அவற்றிடம் ஆயுதங்கள் செல்லக்கூடாது என்று நினைத்த குழுக்கள்தான்’ என்று கூறியதாக டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது.
ஷியா மேலாதிக்கம் நிறைந்த ஈரான் செல்வாக்கை குறைப்பதற்கான இலக்காக கொண்ட பகுதியில், தங்கள் சொந்த மத குழுவாத நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் கட்டார் மற்றும் சௌதி அரேபியா கடினப்போக்கு உடைய இஸ்லாமிய வாதிகளுக்கு ஆயுதங்களைத் திருப்பிவிடுவதில் சுன்னி முடியாட்சிகள் கொண்டுள்ள பங்கையும் சுட்டிக் காட்டுகிறது.
துருக்கிய சிரிய எல்லையில் ஆயுதங்களை பெறும் குழுக்களை தேர்ந்தெடுப்பதில், CIA அதிகாரிகள் தோல்வியுற்றிருப்பதையும் இது குறிக்கிறது: அதாவது “பல எழுச்சிக் குழுக்கள், பிரிவுகள் பற்றிய தேர்ந்த அறிவு இல்லாததை.”
ஆனால் கட்டுரை அதிகமாகக் கூறாதது அமெரிக்கா ஆயுதம் கொடுக்க விரும்பும் “மதசார்பற்ற எதிர்த்தரப்புக் குழுக்கள்” என்பது பற்றித்தான் துல்லியமாக உள்ளது. தேசிய சிரியக் குழுவில் துருக்கியைத் தளமாகக் கொண்ட தலைமைகள் மற்றும் சுதந்திர சிரிய இராணுவம் ஆகியவை அதிகம் செல்வாக்கு உடையவை அல்ல, சிரியாவிற்குள் பெரும் அவமதிப்பைத்தான் கொண்டுள்ளன.
சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group) அக்டோபர் 12 தேதி வெளியிட்டுள்ள அறிக்கை, “தற்காலிக ஜிஹாத், சிரியாவின் அடிப்படைவாத எதிர்த்தரப்பு” என்ற தலைப்பில், “மதசார்பற்ற” ஆயுத எதிர்ப்பு என்பது இல்லை என்று தெரிவிக்கிறது. “சக்திவாய்ந்த சலாபிப் பிரிவு, சிரியாவின் எதிர்த்தரப்புக் குழுக்களிடையே மேலோங்கி நிற்கிறது என்பது மறுக்க முடியாது” என்றும் அத்துடன் “இன்னும் தீவிர மற்றும் ஒப்புதல் அறிவுரை, மற்றும் கொடூரமான உத்திகள் வகையில் சரிவும் உள்ளன” அது குறிப்பிடுகிறது
பெருகிய முறையில் Jabhat al-Nusra [ஆதரவு முன்னணி] மற்றும் Kataib Ahrar al-Sham [சிரிய இராணுவப் பிரிவுகளின் சுதந்திர வீரர்கள்] என்ற குழுக்களின் முக்கிய பங்கு எப்படி குழப்பத்திற்கு இடமின்றி ஜிஹாத் சொல்லாட்சியைக் கொண்டுள்ளது என்பதையும் அது மேற்கோளிட்டு, ஆட்சியை இஸ்லாமிய நாடாக மாற்றி சலாபிக் கருத்துக்கள் அதில் அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.
இறுதியாக இக்கூறுபாடுகளின் பெருகிய செல்வாக்கு “நிதானமான, திறமைகூடிய, மதகுருமார்கள் மற்றும் அரசியல் தலைமை இல்லாததுதான்” என்று அது கூறுவதுடன், இதையொட்டித்தான் நிதானமான சுன்னிக் கூறுபாடுகள் “எழுச்சியாளர்கள்” என அழைக்கப்படுபவர்களை எதிர்க்கின்றனர் என்றும் கூறியுள்ளது.
“மொத்தத்தில் உறுதியான, நடைமுறைத் தேர்ச்சி உடைய தலைமை இல்லாத நிலையில், அத்துடன் குறுகிய பற்றுடைய வன்முறை பெருகும் நிலையில் கடினப் போக்கு உடையவர்கள் கைகளில்தான் அதிகமாயிற்று” என்று ICG அறிக்கை முடிவுரையாகக் கூறுகிறது.
பெருகிய முறையில், அமெரிக்க ஆளும் நடைமுறைக்குள் உள்ள கூறுகளும் சிரியாவில் இஸ்லாமியப் போராளிகளின் அதிகரித்துவரும் செல்வாக்கைத்தான் ஒரு நேரடி அமெரிக்க இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்த மேற்கோளிடுகின்றன.
இக்கருத்தின் பிரதிநிதியாகத்தான் வாஷிங்டன் போஸ்ட்டின் தலைமை வெளியுறவு ஆசிரியரும் 2003ல் ஈராக் மீது அமெரிக்கா படையெடுக்க வேண்டும் என்று முக்கியமாக வாதிட்டவருமான Jackson Diehl உள்ளார். அக்டோபர் 14ம் திகதி எழுதியுள்ள ஒரு கட்டுரையில் டியல் சிரியாவில் உள்ள நிலைமையை “ஒரு வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் மூலோபாயப் பேரழிவு”, “அமெரிக்க அதிகாரத்தை உறுதிப்படுத்துவதில் ஒபாமா தன்னைத்தானே தோற்கடிக்கும் வகையில் கொண்டிருக்கும் எச்சரிக்கையினால் விளைந்தது” என்று கூறியுள்ளார்.
“மத்திய கிழக்கில் ஒரு ‘போர் அலை விலகுகிறது’ என்ற தேர்தல் பிரச்சார கோஷத்தை உறுதியாகக் கொண்டு, ஒபாமா தலையிடுதல் மோதலை மோசமாகத்தான் ஆக்கும் என்று கூறுகிறார்; அதன் பின் அது நேட்டோ நட்பு நாடு துருக்கிக்குப் பரவுகையில், நூற்றுக்கணக்கான அல் குவேடா போராளிகள் போராடுகையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்.” என்று டியல் எழுதியுள்ளார்.
ரோம்னி மற்றும் குடியரசுக் கட்சியினரை பெங்காசி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் மட்டும் குவிப்புக் காட்டுவதற்காக சாடும் டியல் இன்னும் ஒரு ஆக்கிரமிப்புப் போரைப் பற்றி “போர்க் களைப்பு மிக்க அமெரிக்கர்களை” சிந்திக்க வைப்பதைவிட இது எளிதுதான் என்று குறிப்பிடுகிறார். ஆயினும் கூட அவர் தேர்தல் முடிந்தவுடன் எவர் வெள்ளை மாளிகையில் அமர்ந்தாலும் இத்தகைய போர் செயற்பட்டியலில் இருக்கும் என்றும் கூறுகிறார்.
Post a Comment