கிழக்கு மாகாண சபையின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
(ஏ.எல்.றபாய்தீன்பாபு)
கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் நடை பெற்ற போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிழக்கு மாகாணசபை அமைச்சரவையின் பேச்சாளரும்,வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை, பத்திரிகையாளர் மாநாட்டில் வெளியிட்டார்.
அத்தீர்மானங்ளின் விபரம் வருமாறு,,
மாகாண சுகாதார அமைச்சினால் நிருவகிக்கப்பட்டு வரும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் நிருவாகத்தை மத்திய அரசின் சுகாதார அமைச்சின் நிருவாகத்தின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களில் 14 கிராமங்களை இனங்கண்டு விசேட நிதியொதிக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்தல்.
பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் க்காக உத்தியோகபூர்வ விடுதி வழங்கள்
ஆங்கில மற்றும் கணித பாடங்களிற்கான பட்டதாரி ஆசிரியர்களின் நேர்முகப்பரீடசையின் போது உரிய ஆவனங்களைச் சமர்ப்பிக்கத் தவறிய காரணத்தினால் நியமணம் வழங்கப்படாத 7 ஆங்கில பாட பட்டதாரிகளினதும் ஒரு கணித பாட பட்டதாரயினதும் நியமனங்களை வழங்குவதற்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு அமைச்சரவை வாரியம் சிபார்சு வழங்குதல்.
7 புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தல்
அம்பாறை மாவட்டம் மகாஓயா பிரதேசத்தில் காணப்படும் சுடுதண்ணீர் கினறுகள் அமைந்துள்ள பிரதேசத்தில் 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மிகுதிக் கொடுப்பனவை தவணை முறையில் வழங்குதல்.
பொது வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரும் தீர்மாணம் வரவேற்கத்தக்கது
ReplyDelete