Header Ads



ரஷ்யாவின் முஸ்லிம் மாணவிகள் முக்காடு அணிவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி எதிர்ப்பு



(மாஸ்கோ)

பள்ளி மாணவியர், தலையை முக்காடிட்டு வருவதற்கு, ரஷ்ய அதிபர் புடின் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.ரஷ்யாவில், மொத்தமுள்ள, 15 கோடி மக்களில், இரண்டு கோடி பேர் முஸ்லிம்கள். செசன்யா, வடக்கு காகசஸ், டடார்ஸ்டான் ஆகிய மாகாணங்களில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர்.மாணவியர் முக்காடு போட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும், பள்ளி முதல்வர்கள் மிரட்டப்படுகின்றனர். இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் குறிப்பிடுகையில், "ரஷ்யா, மதசார்பற்ற நாடு. எனவே, அனைத்து குடிமக்களிடையே சமத்துவம் கடைபிடிக்கப்படுகிறது. இதே சட்ட திட்டங்கள் தான், பள்ளியிலும் கடை பிடிக்கப்பட வேண்டும்' என்றார்.

No comments

Powered by Blogger.