அறிவாற்றலை மந்தமாக்கும் குளிர்பானங்கள்
(சசிமயூர்)
உங்கள் குழந்தைகள் ஆற்றலில் கொஞ்சம் மந்தமாக இருந்தால், அவர்களைப் பற்றி கவலையடைவதற்குப் பதிலாக அவர்களது உணவில், குடிநீரில் கொஞ்சம் மாற்றம் செய்து பாருங்கள். நிச்சயமாக அவர்களது புத்திகூர்மையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. நேரடியாக சொல்லவேண்டுமானால் 'ஃபுளோரைடு' கலந்த குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்களைத் தவிர்த்து பாருங்கள்; இதனால் அவர்களது நுண்ணறிவு அதிகரிக்கலாம்.
'ஃபுளோரைடு' பற்றிய அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் அப்படித் தான் சொல்லுகின்றன. உலகமயமாக்கல், நகரமயமாக்கல் பல தலையாய பிரச்னைகளையும், குழப்பத்தையும் தந்திருந்தாலும், உண்மையான 'தலை' ஆய பிரச்சனை இது தான். அதாவது தலை சம்பந்தப்பட்ட பிரச்சனை!.. 'ஃபுளோரைட்' நமது வாழ்வில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன், நாம் அதை பற்றி விழிப்புணர்வு அடைந்து நம்மைப் பாதுகாத்துகொள்வது நல்லது.
அதற்கு முன் நீங்கள் பள்ளியில் படித்த பயாலஜி மற்றும் கெமிஸ்டரி பாடத்தைக் கொஞ்சம் நினைவு படுத்திக்கொள்ளுங்கள். படிக்காவிட்டாலும் இப்போது கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.
மனிதனின் மூளையில் இரு பகுதிகளுக்கு நடுவே ஒரு சிறிய நாளமில்லா சுரப்பி உள்ளது. அது சமையலுக்குப் பயன்படும் காய்ந்த திராட்சை அளவில் மிக சிறியதாக இருக்கும். இதற்கு பெயர் தான் கூம்பு சுரப்பி, ஆங்கிலத்தில் பினல் க்ளாண்ட் (pineal gland).
இது மிகச் சிறியதாக இருந்தாலும் இது தான் மனிதனை ஆன்மீக அறிவாற்றலில் உச்ச நிலை அடைய உதவுகிறது. மேலும் இது வெளிச்சத்தில் சுரப்பதில்லை, ஆகவே நாம் ஓய்வெடுக்க இரவு ஒரு முக்கிய காரணமாகிறது. இரவில் பணிபுரியும் சிலர் என்னதான் காலையில் தூங்கினாலும் அவர்கள் உடல் மற்றும் மனம் சோர்வாகவே காணப்படும். சிலர் கண்களை மூடி தியானம் செய்வதையும், மனதை ஒரு நிலை படுத்துதையும் நாம் வெகுவாக அறிந்துள்ளோம்.
முறையான வணக்கவழிபாடுகள், தியானம், யோகா போன்றவற்றைச் சரியான அதிர்வெண்களில் (frequency) நாம் பயன்படுத்தினால்/பயிற்சி செய்தால், இச்சுரப்பியின் செயலாற்றல் அதிகரித்து அதன்மூலம் அதிக நினைவாற்றல், அறிவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் பெற்று திகழலாம். ஆகவே தான் இது மூன்றாவது கண் (third eye) என்றும் அழைக்கப்படுகிறது. 1224 B.C.யிலேயே பண்டைய எகிப்திய காலங்களில் இதை பற்றி விளக்கப்பட்டுள்ளது. மேலும் எகிப்திய, ரோமனிய காலங்களில் இச்சுரப்பியின் முழுத்திறனைப் பெற்று பலர் அசாத்திய அறிவை வளர்த்துள்ளனர். பின்பு இந்து, பெளத்தம், கிருஸ்துவ(கத்தோலிக்) மதங்களில் இதன் முக்கியத்துவம் இதிகாசம், புராணம், கதைகளாக பரவி, அவை மத நம்பிக்கை சார்ந்த செயல்பாடுகளாக மாற்றம் கண்டது. இந்தியாவில் இது 'குண்டலினி' என்ற பெயரில் அறியப்படுகிறது.
கூம்பு சுரப்பி (Pineal gland) குறித்து இவ்வளவும்போதும். அடுத்து ஃபுளோரைடு பற்றி பார்ப்போம்.
ஃபுளோரைடு ஒரு இரசாயன அயனி (Chemical ion) ஆகும். இதை நாம் சர்வ சாதாரணமாக பற்பசைகளில்(toothpaste) பயன்படுத்துகிறோம். இந்த ஃபுளோரட் இல்லாத பற்பசைகளே தற்போது சந்தையில் இல்லை என்று கூட சொல்லலாம். இது பற்களைப் பற்சிதைவு(decay) மற்றும் துவாரம் விழுதல்(cavity) போன்றவற்றிலிருந்து பாதுகாக்க பயன்படுகிறது.
ஆனால் இதை பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் தேவை. ஒரு நாளில் 0.60 ppm (parts per million) என்ற அளவில் உட்கொள்ளுதல் ஆபத்தான உடல் நல கேடுகளை ஏற்படுத்தும். அளவிற்கு மேலாகவோ அல்லது முறையாக உட்கொள்ளாவிட்டால் இது ஆபத்தானது. பல அரசாங்க சுகாதார மையங்கள் இதை பயன்படுத்துவதை ஆதரித்தாலும். கடந்த இருபது ஆண்டுகளாக இதன் உண்மை நிலை கண்டறிய பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு இதன் ஆபாயங்களை வெளிஉலகிற்கு தெரியப்படுத்தி வருகிறார்கள்.
பொதுவாக இந்த ஃபுளோரைடினால் ஏற்படும் உச்சக்கட்ட அபாயம் மரணமாகும். குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உமிழ் நீர் வழிதல், கண்களில் நீர் தொடர்ந்து வழிதல், பலவீனம், மூச்சிறைப்பு, மயக்கம், சோர்வு மற்றும் வலிப்பு ஆகியவை இந்த 'ஃபுளோரைட்' உட்கொண்டால் வரும் கேடுகள் ஆகும். உதாரணமாக, குழந்தைகள் ஒரே நேரத்தில் பற்பசை குழாயில் உள்ள முழு பற்பசையையும் பயன்படுத்தினாலோ, அதை உட்கொண்டாலோ இந்த நிலைக்கு ஆளாகலாம் என்று வைத்து கொள்ளலாம்.
பற்பசைகள் அல்லாமல் தற்போது கடைகளில் விற்கும் பல நுகர்வோர் குடிநீர், குளிர்பானங்களில் இந்த 'ஃபிளோரைட்' கலந்துதான் தயாரிக்கப்படுகின்றன. முக்கியமாக இது கலக்காத 'குடிநீர்' பாட்டிகளே இல்லை. மேலும், குளிரூட்டப்பட்டு வரும் பதப்படுத்திய மாமிச வகைகளிலும் 'ஃபுளோரைட்' உண்டு. இந்த உணவுகள் மூலம் உட்கொள்ளப்படும் 'ஃபுளோரைட்' இரத்த ஓட்டத்தில் கலந்து விடுகின்றன. பின்பு அது நமது பற்களிலும், எலும்புகளிலும் கலந்துவிடுகிறது.
ஆகவே தான், அரசாங்க குடிநீர் விநியோக முறைகளிலும் இந்த 'ஃபுளோரைட்' கலந்து விநியோகப்படுத்தபடுகிறது. ஆனால் இது எல்லாம் ஒரு அளவு தான். மிக ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும். மாறாக அளவிற்கு மேல் போனால் ஆபத்துதான். குடிநீரில் ஒரு லிட்டரில் 1.5 மி.கிராம் அளவிற்கு அதிகமாக இருக்க கூடாது, இருந்தால் முதலில் பற்கள் மஞ்சளாக மாறும், இது அதிகமாக முடக்குவாதம் வரை போகலாம்.
'ஃபுளோரைட்' குழந்தைகளின் பற்களின் வளர்ச்சிக்கும், பின்பு பற்களைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட்டாலும், 1990களில் இதனபபாயத்தை வெளி உலகிற்குக் கொண்டு வந்தவர் ஜெனிபர் லூக் (Jennifer Luke) என்ற விஞ்ஞானிதான். நாம் முன்பு கூறிய கூம்பு சுரப்பி (pineal gland) நாம் உட்கொள்ளும் சோடியம் ஃபுளோரைடினால் அதிகம் பாதிக்கப்படுவதாக கண்டறிந்து கூறினார். உடலில் உள்ள மற்ற பாகங்களைவிட அதாவது பற்கள், எலும்புகளைவிட கூம்பு சுரப்பி ஃபுளோரைடைக் காந்தம் போல ஈர்க்கும் தன்மை உடையதாக இருப்பதாக அவர் கண்டறிந்தார்.
அதிகப்படியான ஃபுளோரைடு கூம்பு சுரப்பியைப் பாதிப்பதால், அது புத்தி கூர்மையை மழுங்கடிக்கச் செய்கிறது. கூம்பு சுரப்பி பாதிப்பு அடைந்தால், சரியான முறையில் ஆழ்ந்து சிந்திக்கவோ படிப்பவைகளை அதிகநாட்கள் நினைவுபடுத்தி வைக்கவோ முடியாமல் மூளை பலவீனம் அடைகிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீரில் இருக்கும் 'ஃபுளோரைடை' நம்மால் சாதாரண வடிகட்டிகளால் நீக்கவும் முடியாது. ரிவர்ஸ் ஓஸ்மோஸ் (reverse osmosis) மூலம் அல்லது சிறப்பான தண்ணீர் வடிகட்டிகள்(distillation filter) மூலம் தான் நீக்க முடியும்.
நாஜி படைகளைகளும், ரஷ்யர்களும் குடிநீரில் 'ஃபுளோரைட்' கலக்கும் திட்டத்தை ஆரம்பத்தில் கொண்டுவந்தனர். முகாம்களில் அடைக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து கேள்விகள் கேட்கா வண்ணம், புத்தி கூர்மையை மழுங்க செய்ய அந்த முகாம்களின் தண்ணீரில் 'ஃபுளோரைட்' கலந்து விநியோகம் செய்யப்பட்டது.
தற்போது சீனா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, ஜெர்மனி, டென்மார்க், சுவீடன், நெதர்லாந்து, ஹங்கேரி, ஜப்பான் மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் தண்ணீர் விநியோகத்தில் 'ஃபுளோரைட்' அறவே இல்லை. நம் நாட்டில் 33% சதவீத நில நீரில் 'ஃபுளோரைட்' அதிமாகி குடிக்க தகுதியில்லாத மோசமான விளைவுகளைத் தரும் நீராக உள்ளது என்பது குறிப்பிட்டு கூறவேண்டியிருக்கிறது. சென்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் கொண்டு வந்த நாடாளுமன்ற புறகணிப்பு தீர்மானங்களில் இதுவும் ஒன்று.
தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் அதிகம் குடிக்கும் கோக், பெப்சி போன்ற குளிர்பானங்களிலும் 'ஃபுளோரைட்' அதிமாக இருக்கிறது.
நம் நாட்டில் பெரும்பாலான நிலத்தடி நீரிலேயே 'ஃபுளோரைட்' இருப்பதால் அதை மூலதனமாக கொண்டு தயாரிக்கப்படும் பெரும்பாலான 'கார்பனேடட் குளிர்பானங்களிலும்' அதன் வீச்சு நிச்சயம் இருக்க வாய்ப்புண்டு. இந்திய மார்க்கெட்டில் பாட்டில் குடிநீர், குளிர்பானங்கள், பழச்சாறு விற்பனை அதிகரித்து வந்தாலும், எந்த நிறுவனமும் பாட்டில் லேபிள்களில் 'ஃபுளோரைட்' அளவைக் குறிப்பிடுவதில்லை என்பது வருந்தத்தக்கது.
ஆனால் இந்தியன் ஜெர்னல் ஆப் டெண்டல் ரிசர்ச் செய்துள்ள ஆராய்ச்சியில் பின்வரும் தயாரிப்புகளிலும் 'ஃபுளோரிட்' கலந்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளது. அவை, பாட்டில் குடிநீர்களான Kinley, Bisleri, Kemp, Omkar, Flair, Aquafina, McDowells, Royal Challenge, Crystel, Kingfisher ஆகியவயையும், பாட்டில் குளிர்பானங்களாகிய Limca, Mountain Dew, Fanta, Pepsi, Cocoa-Cola, 7up, Slice, Citra, Miranda, Maaza, Thumbs-up, Sprite ஆகும்.
ஆகவே நாம் குழந்தைகளுக்கும், நமக்கும் இந்தக் குளிர்பானங்களை தவிர்ப்பது, குழந்தைகளின் அறிவு ஆற்றல் வளர உதவுவதோடு உண்மையான நுண்ணறிவு, ஆன்மீக ஆற்றல் அதிகரிக்கவும் பயன்படும். inneram.com
Post a Comment