Header Ads



ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு முஸ்லிம் மீடியா போரம் பயிற்சி

இலங்கையில் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் குறைவாகவுள்ள பிரதேசங்களில், ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் பயிற்சிகளை வழங்கி அவர்களை ஊடகத்துறைக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.

பொலன்னறுவை, பதுளை, குருணாகல், மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மேற்படி பயற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான பாடசாலைக் கல்வியை முடித்துகொண்ட முஸ்லிம் இளைஞர், யுவதிகள் விண்ணப்பிக்க முடியும். தெரிவுசெய்யப்படுபவர்களுக்கு பிரபல ஊடகவியலாளர்களால் பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார்படுத்தப்படுவர். இதன் முதற்கட்டமாக நவம்பர் இறுதிப் பகுதியில் 2 நாள் செயலமர்வொன்று பொலன்னறுவை மாவட்டத்தில் நடாத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி மாவட்டங்களில் ஊடகத்துறையில் ஆர்வமுள்ள, பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்ட இளைஞர், யுவதிகள் தங்களது விண்ணப்பங்களை கீழுள்ள முகவரிக்கு நவம்பர் 02ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்ககூடியதாக அனுப்பி வைக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.எம். நிலாம் தெரிவித்துள்ளார். 

ஊடகவியலாளர் பயிற்சிநெறி, 
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், 
ஏ3 1/1, மனிங்டன் பிளேஸ், 
எல்விட்டிகல, கொழும்பு-8.




1 comment:

  1. The correct address is:
    Sri Lanka Muslim Media Forum,
    A3-1/1, Manning Town Flats,
    Elvitigala Mawatha,
    Colombo 8

    ReplyDelete

Powered by Blogger.