அவசர சத்திர சிகிச்சைக்கு உதவி கேட்கிறார்..!
(ஜே.எம்.ஹாபீஸ்)
கண்டி மாவட்டத்திலுள்ள மடவளை பஸார், ஹபுகஸ்தென்ன, இலக்கம் 85-1 என்ற முகவரியைச் சேர்ந்த அப்துல் றஹ்மான் பாத்திமா பஸ்லினா என்ற 36 வயது பெண்மணிக்கு அவசர சத்திர சிகிட்சையின் நிமித்தம் பல இலட்ச ரூபா பணம் தேவைப்படுவதாகவும் நல்மனம் படைத்த பரோபகாரிகளிடமிருந்து உதவியை அவர் எதிர் பார்த்துள்ளார்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவர் மேற்படி பெருமளவு பணத்தை திரட்டமுடியாத நிலையில் உள்ளார்.
கண்டி வைத்திய சாலையின் சிறுநீரக சத்திர சிகிட்சை நிபுணர் டாக்டர் ஏ.டப்ளியூ.எம்.வசீல் பரிசோதனைகளை மேற்கொண்டு அதற்கான அத்தாட்சிக் கடிதங்களை வழங்கியுள்ளார்.
மடவளை ஜாமியுல் கைராத் ஜூம்மா பள்ளி பரிபாலன சபையினரும் அவரது வேண்டு கோளை உறுதிப் படுத்தியுள்ளனர். புhத்ததுமபறை பிரதேச சபை அங்கத்தவர் எம்.ஆர் மலீக் இதுவிடயமாக உறுதிப் படுத்தியுள்ளார்.
அவருடைய தாயாரான சபுரியா உம்மா என்பவரும் ஏழு பிள்ளைகளின் தாயான தன்னால் உதவ முடியாத நிலையில் இருப்பதாகவும் மனமுவந்து உதவுமாறு பொதுமக்களை வேண்டியுள்ளார்.
இவருடைய தந்தையும் இதே விதமான சிறுநீரக பாதிப்பிற்குள்ளாகி முறையான சிகிட்சை வழங்க முடியாமையால் சிறுவயதிலே அவரையும் இழக்க நேர்ந்துள்ளது.
எனவே மேற்படி பெண்மணியின் நிலைமையை கருத்திற் கொண்டு தங்களால் இயன்ற உதவிகளை பின்வரும் வங்கிக் கணக்கிற்கோ அல்லது அவரது மேற்படி முகவரிக்கோ அனுப்பிவைக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கணக்கு விபரம்.
ஏ.ஆர்.எப். பஸ்லினா,
இலங்கை வங்கி
கணக்கு இலக்கம்- 73735582 (மடவளை பஸார் கிளை)
அவரது தொலைபேசி இலக்கம்- 081 2475552
Post a Comment