மூதூர் அல்-ஹிலால் அதிபர் தென்கொரியா செல்கிறார்
மூதூர் அல்- ஹிலால் மத்திய கல்லூரியின் அதிபர் யூ.என்.ஏ.கபூர் தென்கொரியாவில் இடம்பெறவுள்ள ஆசிய பசிப்பிக் வலய அதிபர்களுக்கான செயலமர்வில் இலங்கையைப் பிரதி நிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளும் முகமாக பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆசிய பசுப்பிக் வலயத்தைச் சேர்ந்த 30 நாடுகளிலிருந்து 30 அதிபர்கள் இச்செயலமர்வுக்கு கலந்து கொள்ளவுள்ள நிலையில் இலங்கை சார்பாக அதிபர் கபூர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மூதூர் அல்-ஹிலால் மதத்திய கல்லூரி , திருகோணமல சென்ஜோசப் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் பேராதனை பல்கலைக் கழகத்தில் கலைமாணிப்பட்டத்தையும் தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.
1985ஆம் ஆண்டில் பதுளை நேபியர் வித்தியாலயத்தில் உதவி ஆசிரியராக முதலாவது நியமனத்தைப் பெற்ற இவர் 1999ஆம் ஆண்டில் இடம்பெற்ற அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அல்-ஹிலால் மத்திய கல்லாரியின் அதிபராக நியமிக்கப்பட்டதோடு தொடர்ச்சியாக இற்றைவரை பணிபுரிந்து வருகின்றார்.
அதிபர் கபூர் கடந்த வருடம் சிறந்த அதிபருக்கான ஜனாதிபதி விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment