பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி (படங்கள்)
(இக்பால் அலி)
மருத்துவம், பொறியல் பீடங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுச் செலவு பெரும் சுமையைக் கொண்டது. இந்தச் சுமையைத் தாக்குப் பிடிக்க இயலாமல் தம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் மிகுந்த சிரமத்தினை எதிர் கொண்டுள்ளனர். மிக மோசமான பின்தங்கிய கல்விச் சூழலிலுள்ள தம் சமூகத்தை உரமூட்டக் கூடியதாக இலங்கையில் எந்த அமைப்பும் பாரியளவிலான புலமைப் பரிசில் நிதி வழங்குவதில்லை. அந்த வகையில் எங்கள் அமைப்பினால் இந்நிதி வழங்கப்படுன்றது. இதனை மாணவர்கள் சிறந்த முறையில் பொறுப்புணர்வுடன் கையாள வேண்டும் என்று ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான் தெரிவித்தார்.
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகங்களில் மருத்துவம். பொறியியல் மற்றும் ஏனைய பிரிவுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் நிதி உதவி வழங்கும் நிகழ்வு ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் தலைமையகமான பறகஹதெனியாவில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான் அங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் நிதிச்செயலாளர் எம்.எம். ஹிதுமத்துல்லாஹ் மற்றும் நாட்டின் பல பாகங்களிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் பங்கு கொண்டனர்.
Post a Comment