Header Ads



அக்குறணையில் மண் சரிவு (படங்கள் இணைப்பு)


(ஜே.எம்.ஹபீஸ்)

அக்குறணை புளுகொஹொதென்னை பிரதான வீதியில் இன்று (2012 10 30) அதிகாலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக அலவத்துகொடை பொலீஸாரினால்  அவ் வீதியை வாகன போக்குவருத்துக்கு மூடியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்கலாக பெய்து வரும் கடும் மழை நீர் மற்றும் குழாய் நீர் கசிவு என்பன காரணமாக இம் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

அக்குறணை பிரதான வீதியின் மண்திட்டுடனான கற் பாறை மற்றும் பாரிய மரம் என்பன வீடு ஒன்றின் மேல் விழுந்ததன் காரணமாக அவ் வீட்டிற்கும்; சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பிரதேசம் ஆபத்தான நிலையில் உள்ளதால்  பிரதேச வாசிகள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அக்குறணை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. 




No comments

Powered by Blogger.