Header Ads



உலக முஸ்லிம்களுக்கு ஒபாமாவும், மனைவியும் ஹஜ் பெருநாள் வாழ்த்து தெரிவிப்பு..!


அமெரிக்கா மற்றும் உலகெங்கும் உள்ள முஸ்லிம்களுக்கு ஹஜ் வாழ்த்துகளை அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிஷெலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஒபாமா வெளியிட்ட வாழ்த்துச் செய்தி,

""ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பக்ரீத்தை ஏழை எளியவர்களுக்கு உணவளித்தும், நன்கொடைகளை வழங்கியும் முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர். 

அதேபோன்று பசிக்கொடுமையையும், நோயையும், போரையும் உலகிலிருந்து அகற்ற பிற சமூகத்தினருடன் இணைந்து முஸ்லிம்கள் ஆண்டு முழுவதும் பாடுபட வேண்டும்'' என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.