அரசியல் அநாதையாக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்களின் நிலை
அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி)
பயங்கரவாத புலிகள் செய்த அட்டூழியங்கள் முஸ்லிம்கள் வரலாற்றில் மாறாத வடுவாகும். இது இலங்கை முஸ்லிம்களின் உள்ளங்களில் ஏற்பட்ட கருப்பு அத்தியாயமாகும் .
பயங்கரவாதிகளினால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகள், விதவையாக்கப்பட்ட பெண்கள்,சூறையாடப்பட்ட செல்வங்கள், காவுகொள்ளப்பட்ட உயிர்கள், பாழ்படுத்தபட்டப்பட்ட அசையும் அசையா சொத்துக்கள்,அசிங்கபடுத்தபட்ட புன்னியஸ்தளங்கள்,கடத்திசெல்லபட்ட வாலிபர்கள் இதன் பிட்பாடாய் எழுந்த, இடப்பெயர்வு, அவலம், கல்வி பொருளாதார பின்னடைவு, இவற்றுக்கெல்லாம் எப்போது தீர்வு, அதுபற்றிய முஸ்லிம்களின் நிலை என்ன?முஸ்லிம் அரசியல் வாதிகளின் அரச கொள்கை என்ன ?
வட மாகாண முஸ்லிம் மீல்குடியேற்றதுக்கான காலவரையறை என்ன?
இது சம்மந்தமாக முஸ்லிம் அரசியல் வாதிகளின் அரசியல் வியூகம் என்ன ?
அதிகபட்சம் தீர்வை நோக்கிய அரசியல் நகர்வுதான் என்ன?
குறைந்தபட்சம் அரசியல் அறிக்கைதான் என்ன ?
சென்றகால நிகழ்வுகள் இன்றய அவலங்களாக கண்முன் காட்சி தந்துகொண்டிருக்க கருப்பு ஒக்டோபர் நினைவு கூறி விட்டு செல்லும் சடங்ககாகத்தான் இருந்து வருகிறது.
முஸ்லிம்கள் ஏதோ இலங்கையில் தற்காலிக குடியேற்றத்துக்கு வந்தவர்கள் போன்றுதான் நடத்தபடுகின்றனர்.
தேர்தல் காலங்களில் மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி எரியப்படும் கருவேப்பிலையாக முஸ்லிம்கள் பயன்படுத்தபடுவது பற்றி சமூக அரசியல் ஆர்வலர்கள் காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தற்காலிக சுகபோக லாபங்களுக்காக முஸ்லிம்களின் உரிமைகளை அடகு வைத்து நமது அரசியல் உரிமைகளை சுயலாபங்களுக்காக விலைபேசுவது சமுதாயதுக்கு செய்யும் துரோகமாகும்.
யுத்தம், கலவரம் விட்டுசென்ற தடயங்கள் சமூகத்தை அனாதையாக்கி, பரிதாபபடும் நிலையில் முஸ்லிம்களின் நிலை இருக்க அதை பேசுபொருளாக்க நமது அரசியல் தலைமை முன்வராமல் ஆங்காங்கே நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளுக்கு அதிக சத்தமும் அழுத்தமும் கொடுப்பது ஏதோ அரசியல் பின்னணி, சுயலாபம் என்பவற்றை எடுத்துகாட்டுகிறதாகவே என்ன தோனுகிறது.
அரசாங்கதுடனான ஆதரவுபோக்குக்கு நமது அரசியல் தலைமை வைத்திருக்கும் விலைதான் என்ன? மக்களுக்கு வாக்குறுதியை பகிரங்கமாக கொடுத்து ஓட்டு வங்கி மூலம் பதவிகளை எடுத்துவிட்டு அரசுடன் நடந்த பேரம்பேசுதலை அந்தரங்கமாக முடித்துகொல்வது எந்தவகையில் நியாயம்.?
இப்படியான முஸ்லிம் அரசியல் தலைமை முஸ்லிம்களின் எதிர்காலத்தை குழிதோண்டி புதைப்பதாக விளங்கவில்லையா?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்த ஒரு கருத்தை இங்கு பதிவது பொருத்தமாக இருக்கும் :
முஸ்லிம் அரசியல் வாதிகளும் கட்சிகளும் ஒன்றாக இணையவில்லையானால் முஸ்லிம் சமுதாயத்திற்கான எவ்வித முன்னேற்றத்தையும் எதிர்காலத்தில் கண்டுகொள்ள முடியாமல் போய்விடும்.
சிங்கள பேரினவாதம் மாறிமாறி முஸ்லிம்களை தமது கைக்குள் போட்டுக் கொண்டு வருகிறது. சிறுசிறு இலாபங்களுக்காக முஸ்லிம் அரசியல் வாதிகள் அதற்குள் அகப்படும்போது முஸ்லிம்களின் அரசியல் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்பதை இக் கட்டத்தில் நான் பிரகடனம் செய்கிறேன். இலங்கையில் பேரம் பேசும் அரசியலை முதன் முதலில் முன்னெடுத்தது இடதுசாரிக் கட்சிகளே ஆகும்
தொழிலாளர்களின் நன்மை கருதி அதனை அக் கட்சிகள் செய்தன. தமிழர்களின் அரசியலில் நீலன் திருச்செல்வமோ, குமார் பொன்னம்பலமோ தமிழர் விடுதலைக் கூட்டணியோ தற்போதிருக்கும் தமிழ்க் கூட்டமைப்போ பேரம் பேசும் அரசியலை செய்தது கிடையாது. ஜே.வி.பி. யும் தொண்டமானின் அரசியல் கட்சியும் பேரம் பேசும் அரசியலை நடத்தி இருக்கின்றன. முஸ்லிம்கள் எதிர்காலத்திலும் பேரம் பேசும் அரசியலை முன்னெடுக்க வேண்டும். அது எந்த இனத்திற்கும் எதிரானது அல்ல என்பதையும் அனைத்து இன மக்களும் புரிந்து கொள்ளுதல் வேண்டும் என்றார்.
உண்மைதான்..! பேரம் பேசும் அரசியல் கொண்டுவரும் பணி அனைத்து முஸ்லிம் கட்சி ஆதரவாளர்களாலும் முடுக்கிவிடப்ப்படவேண்டும். தமது பிரதேசம், கிராமம் என்று சுருங்கிவிடாமல் இலங்கையின் மூத்த அறிஞர்கள், அரசியல் விற்பன்னர்கள் இஸ்லாமிய தாவா இயக்கங்கள்,வர்த்தகர்கள் போன்றோர் இதில் அதிகம் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது.
நமது உரிமைகளை வென்றெடுக்க சிறுபான்மை என்பது ஒரு குறை அல்ல அமெரிக்காவில் மிக சிறுபான்மையாக இருக்கும் யூத அமுக்ககுழுதான் பெரும்பான்மை மக்களின் அரசியல் தலைவிதியை மாற்றி அமைக்கும் ஒரு பெரும் சக்தியாக உள்ளதை நாமும் உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும்
தற்காலிகமான சேவைகளை கண்டு மகிழ்பவன் மனிதன் .சமூக அக்கறை உள்ள ,சமூகத்தின் கல்வி ,பொருளாதாரம் ,உயர்பதவிகளில் வேலைவாய்ப்பு ,போன்ற தூர சிந்தனை ,நிரந்தர லாபங்களுக்காக போராட நினைப்பவன் புனிதன்.
Post a Comment