'இந்தோனேசிய பெண்கள் விற்பனைக்கு'' - மலேசியாவின் செயலுக்கு எதிர்ப்பு
"இந்தோனேசிய பெண்கள் விற்பனைக்கு உள்ளனர்' என்ற, மலேசிய இணைய தள விளம்பரத்தால் கண்டனம் எழுந்துள்ளது.மலேசியாவில், இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பெண்கள், அதிக அளவில் வீட்டுவேலை செய்கின்றனர்.
இவர்கள் தங்கள் எஜமானர்களால் பல்வேறு, கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.இதற்கிடையே, மலேசியாவை சேர்ந்த சிலர், இணைய தளத்தில், "வீட்டு வேலை செய்யும் இந்தோனேசிய பெண்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளனர். 60 ஆயிரம் ரூபாய், கட்டினால் போதும். நீங்கள் சமைக்க வேண்டியதில்லை; வீட்டு வேலை செய்யாமல் ஓய்வாக இருக்கலாம்' என்ற வாசகம் அடங்கிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர்.
தங்கள் நாட்டு பெண்களை கடையில் விற்கும் சரக்குக்கு சமமாக மதிப்பிட்டு விளம்பரம் செய்துள்ளதற்கு, இந்தோனேசிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.மலேசியாவில் உள்ள இந்தோனேசிய தூதர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியத்தை சந்தித்து, சர்ச்சைக்குரிய வகையில் விளம்பரம் வெளியிட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி வற்புறுத்தியுள்ளார்.
Post a Comment