'திவிநெகும' வாழ்வு எழுச்சி நான்காம் கட்ட தேசிய நிகழ்வுகள்
(ரீ.கே.றஹ்மத்துல்லா)
'திவிநெகும' வாழ்வு எழுச்சி நான்காம் கட்ட தேசிய நிகழ்வுகள் வியாழக்கிழமை நாடு முழுவதிலுமுள்ள கிராம சேவகர் பிரிவுகளிலும் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அம்பாறை மாவவட்ட பிரதேசசெயலகங்களில் பிரதேசசெயலாளர்களின் தலைமையில் பிரதேச அரசியல் முக்கியஸ்தர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவின் ஒலுவில்- 07 கிராம சேவகர் பிரிவில் கிராமசேவகர் எஸ். நியாஸ் தலைமையில் நிகழ்வு இடம் பெற்று பயாளிகளுக்கான பயிர் விதை மற்றும் தென்னங்கன்றுகள் சமூர்த்தி உத்தியோகத்தர் ரீ.கே. றஹ்மத்துல்லா மற்றும் கிராம சேவகர் நியாஸ் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டன.
அட்டாளைச்சேனை பிரதேசசெயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.ஐ. ஹனிபா தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கலந்து கொண்டு திவிநெகும திட்டம் தொடர்பாகவும், அசராங்கம் சமூர்த்தி அதிகாரிகள் மற்றும் 15 இலட்சம் பயானாளிகளின் நன்மை கருதி கொண்டுவரவுள்ள திவிநெகும திணைக்களம் சட்ட மூலம் தொடர்பாகவும் உரையாற்றினர்.
Post a Comment