Header Ads



முஹம்மது நபியை அவதூறாக பேசியவர் சுட்டுக்கொலை - பாகிஸ்தானில் சம்பவம்


பாகிஸ்தானில் முகமது நபியைப் பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

லாகூரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குஜ்ரன்வாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஜ்ஜத் ஹுசேன். இவர் முகமது நபியைப் பற்றி அவதூறாகப் பேசியதாக கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார். 

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என்றுகூறி அவரை கடந்த மாதம் விடுவித்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அங்குள்ள கடைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, துப்பாக்கியுடன் வந்த 2 பேர் ஹுசேனை சரமாரியாகச் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதன்பின்னர், இருவரும் போலீஸில் சரணடைந்தனர். அவர்கள் ஷேக் சீஸன் மற்றும் அவைஸ் அகமது என்பதும், ஹுசேனின் வீடு அருகே வசிப்பவர்கள் என்பதும் தெரிந்தது. விசாரணையில், முகமது நபியை பற்றி தவறாக பேசியதால் ஹுசேனை சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.