ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கையர்களிடையே யாழ் முஸ்லிம் இணையத்தின் வகிபாகம்
(பிரான்ஸிலிருந்து ஜெஹானா அப்துல் குத்தூஸ் ஜரீர்)
1990-10-30 யாழ்ப்பான முஸ்லிம்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத பெருந்தன்மையோடு மன்னித்துவிட்ட ஆனால், சீர் செய்ய முடியாத ஒரு நாளாகும். சொல்லொண்ணா துயரங்களுக்கும் , உயிர், உடைமைகள், அனைத்தையும் துறந்து துரத்தப்பட்ட வெருண்டோடிய அப்பாவி முஸ்லிம்களின் வாழ்க்கையில் வடுக்கள் நிறைந்த கருப்பு நாளாகும்.
இத்துயரங்களை அவ்வப்போது சில மிடியாக்கள் எடுத்து உரைத்தாலும், உலகத்திற்க்கு சரியான முறையில் எடுத்து சொல்லவதுக்கு ஒரு மார்க்கமும் இல்லாத ஒரு இருண்ட கால பகுதி இருந்தது வந்தது. அச்சமயத்தில்தான் சரியான நேரத்தில் எமக்காக குரல் கொடுக்க எமது விரட்டப்பட்ட சமுகத்தில் இருந்தே ஒரு குரல் எழுந்தது.
ஆம் அத்தைரியம் மிக்க குரல் தான் யாழ் முஸ்லிம் இணையம். இச் சமூகத்துக்காக ஓங்கி ஒலித்து கொண்டு இருக்கும் இக் குரல் ஆரம்பித்து 2 வருடம் பூர்த்தியாகும் இவ்வேளையில் இதை எழுதுவது சாலச் சிறந்தது என எண்ணுகிறேன். எம் சமுகத்தின் குரலான யாழ் முஸ்லிம் இணையதளம் பிறந்தவுடன் தவழாமல் வீறு கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டது இறைவன் துணையுடன். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்..! இந்நிலை மேலும் நீடிக்க இறைவன் அருள் புரிவானாக!!
மேலும் யாழ் முஸ்லிம் இணையதளத்தை அன்றாடம் பார்ப்பது இப்போது வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்களின் தினசரி கடமைகளில் ஒன்றாகி விட்டது. செய்திகளின் நம்பகத்தன்மை, தனித்துவம், நேர்த்தியான அமைப்பு, ஊடகவியல் ஒழுக்கம், பாரபட்சம்மின்மை, அனைத்தையும் தனது உயரிய பண்பாக தன்னகத்தே கொண்டு இருக்கும் யாழ் முஸ்லிம் மக்களுக்கு எது தேவையோ அதை உரிய முறையில் வழங்குகின்றது.
ஊர் செய்திகள், உலக செய்திகள், மருத்துவ செய்திகள் மற்றும் வினோத செய்திகள், மரண அறிவித்தல்கள் என அனைத்தையும் உடனுக்கு உடன் வளங்கிவிடுவதில் யாழ் முஸ்லீம்க்கு நிகர் யாழ் முஸ்லிம்தான். அதே சமயத்தில் எம் சமுகத்துக்கு ஏற்பட்ட அநீதிக்க்காகவும் குரல் கொடுக்கின்றது.
இவ் இணையத்தளம் உலகெங்கும் சிதறி கிடக்கும் எம் சமுகத்தை ஒன்றிணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகின்றது , எனவே எமக்காக எம் சமுதாய ஒற்றுமைக்காக உழைக்கும் யாழ் முஸ்லிமுடன் நாம் அனைவரும் கை கோர்ப்பது காலத்தின் அவசியம். மென்மேலும் திறம்பட சிறந்த சேவை செய்யும் இவ் இணையதளத்துடன் நாம் அனைவரும் இணைத்திருப்பது காலத்தின் தேவை ஆகும். நிறைகள் நிறைந்துருக்கும் யாழ் முஸ்லிம் இணையத்தில் குறைகள் சொல்லவதுக்கு எதுவும் இல்லை.
இன்னும் கொஞ்சம் மார்க்கம் சம்பந்தமாக விடயங்களை கூட்ட்டலாம்னு தோன்றுகின்றது மேலும் மேலும் வளர்ந்து கொண்டு போகும் யாழ் முஸ்லிம் தனது சிறந்த சேவையை முஸ்லிம் சமுகதிட்க்க்காக செய்வதற்க்கு கூறிய அணைத்து சக்திகளையும் அல்லாஹ் இதன் இளம் ஆசிரியர்க்கு வழங்குவானாக .. ஆமின் !!!!
Post a Comment