முஸ்லிம்களின் பாரம்பரிய கலைகள் அருகிவருகிறது - மத்திய மாகாண முதலமைச்சர் கவலை
(இக்பால் அலி)
தத்தமது சமய கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களை பின் பற்றி நடப்பதன் மூலம் நாட்டில் சிறந்த பிரஜைளாக வாழ முடியும். அதேபால் நாடும் சீரும் சிறப்புடன் திகழும் என்று மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக தெரிவித்தார்.
மத்திய மாகாண முஸ்லிம் சமய கலாசாரப் பிரிவின் ஏற்பாட்டில் ஹஜ் இஸ்லாமிய பெருநாள் கலாசார தின நிகழ்வு கெலிஓய கல்கமுவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் இன்று நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்நாயக அங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,,
இலங்கை வரலாற்றில் எந்த மாகாண அமைச்சும் இவ்வாறான ஹஜ் முஸ்லிம் கலாசார விழாவினை நடத்தி இருக்காது எனக் கருதுகின்றேன், இது வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த முக்கிய நிகழ்வு. முஸ்லிம்களின் பாரம்பரியக் கலைகள் அரிகி வரும் இக்காலகட்டத்தில் இவ்வாறான நிகழ்வுகளின் மூலம் மீளவும் உயிர்ப்பிக்கக் கூடிய தன்மை எழுகின்றன. அது மாத்திரமல்ல இஸ்லாமிய மார்க்க அறநெறிக் கருத்துக்களை மாணவர்கள் கற்றுக் கொள்ளக் கூடிய தன்மை ஏற்படுகிறது. இனி வரும் காலங்களில் இந்நிகழ்வை விட வெகு சிறப்பாகச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கும் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கும் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில் பாடசாலை அதிபர் சீ. எம். மஹ்பூப், மத்திய மாகாண முதல் அமைச்சரின் முஸ்லிம் சமய கலாசாரப் பிரிவின் இணைப்புச் செயலாளர் ரஷPட் எம். ரியாழ், கம்பளை கல்வி வலய உதவிப் பணிப்பாளர் நஜீம் நளீமி மத்திய மாகாண மனித உரிமை அமைப்பின் பணிப்பாளர் சலாஹுதீன் அனஸ், ஐடெக் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ஐ. ஐனுடீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment