குறைந்த வருமானம் பெறுவோருக்கு உதவித்தொகை (படங்கள்)
(ஜே.எம். வஸீர்)
விவசாய அமைப்புக்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் பண்முகப்படுத்தப்பட நிதி ஒதுக்கீட்டிலிருந்து அக்கரைப்பற்று விவசாய அமைப்புக்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று காலை(2012-10-23) உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அபுல்ஹசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் சகி விவசாய அமைப்புக்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பதையும் அருகில் அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி மற்றும் கலந்து சிறப்பித்த விவசாயிகளையும் படங்களில் காணலாம்.
சர்வதேச முதியோர் தினத்தையொட்டிய நிகழ்வு அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நேற்று (2012-10-23) உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றசான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. குறைந்த வருமானம் பெறும் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கு மஹிந்த சிந்தனை மேவலைத்திட்டத்திற்கமைய மாதமொன்றுக்கு 1000 ரூபா வழங்கப்படவுள்ளது. இதன் முதலாவது வைப்பிலிடப்பட்ட வங்கிப் புத்தகத்தினை அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் சகி மூத்த பிரஜை ஒருவருக்கு வழங்கப்படுவதையும் இந்நிகழ்வின் போது கலந்து கொண்ட அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் கலந்து கொண்ட முதியோர்களையும் படங்களில் காணலாம.

Post a Comment