தீர்வு இழுத்தடிக்கப்படுவதற்கு த.தே.கூட்டமைப்பே பொறுப்பு - கெஹெலிய கூறுகிறார்
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே பொறுப்பேற்கவேண்டும் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பில் தகவல் தெடரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் தவகல் தெரிவிக்கையில்:
தேசிய பிரச்சினைக்கான தீர்வு பற்றி கலந்துரையாடவும் அது தொடர்பில் முடிவுகள் எடுக்கவும் உகந்த இடம் பாராளுமன்றமே என்பதே அரசின் நிலைப்பாடு. மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்iறிணைந்து எடுக்கும் தீர்வு எதுவானாலும் அதனை அரசாங்கம் ஏற்று செயல்படும் என்பதை ஜனாதிபதி மிகவும் தௌpவாகக் கூறியுள்ளார்.
அடிக்கடி இந்தியா சென்று வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத் தெடரிவுக் குழுவில் கலந்துகொள்ள தயக்கம் காட்டுகின்றனர். எனவே தேசிய பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்பட அவர்கள்தான் காரணம். இதே நிலை தொடர்ந்தால் தேசிய பிரச்சினைக்கான தீர்வை அரசாங்கமே முன்வைக்கும். எனினும் அதற்கான சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லை எனவும் அமைச்சர் கூறினார்.
Post a Comment