லெபனானிலுள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
லெபனானில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அங்குள்ள இலங்கையர்களை பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வெளிவிவகார துறை அமைச்சும், லெபனானுக்கான இலங்கைத் தூதரகமும் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. லெபனானில் சுமார் 80 ஆயிரம் இலங்கையர்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்கியுள்ளனர்.
அண்மைய நாட்களாக லெபனானின் பல பகுதிகளில் மோதல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இவ்வாறான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தற்போது, லெபனனில் ஆபத்தான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அங்குள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. அவசர தருணங்களில் இலங்கையர்களை மீள அழைப்பதற்கும், பாதுகாப்பு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment