Header Ads



நான் எஸ்.எம்.எஸ். அனுப்பவில்லை - ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு



(முஸ்லிம் காங்கிரஸ் ஊடகப்பிரிவு)

கிழக்கு மாகாண சபையில் திவிநெகும சட்ட மூலத்தை ஆதரிக்குமாறு  தாம் அதன் எந்த உறுப்பினருக்கும் நியுயோர்கில் இருந்து குறுந்தகவல் எதனையும்  அனுப்ப வில்லை என்|றும், அந்த தகவல் பொய்யானது என்றும் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கில் திவிநெகும வாக்கெடுப்பில் கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து தாம் நேர்மையான கோபத்தை அவர்களிடம் வெளிப்படுத்த நேர்ந்ததாகவும் கூறினார்.

சம்மாந்துறையில்  நடைபெற்ற மாகாண அமைச்சர் எம்.ஐ.மன்சூர் அவர்களின் வாக்களித்த மக்களுக்கு நன்றி நவிலும் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் இதனைத்தெரிவித்தார்.

அமைச்சர் ஹக்கீமின் உரையின் போது மேலும் தெரிவித்தவையாவன, 

சேதமில்லாத விட்டுக்கொடுப்பு, நேர்மையான கோபம் என்பன மறைந்த எமது தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் உயர் பண்புகளாக விளங்கின என்பதை இன்று நல்லிரவின் பின் பிறக்கும் அவரது பிறந்த நாளை முன்னிட்டு நினைவூட்டுவது பொருத்தமானது. 

இவ்விரு பண்புகளையும் நானும் இயன்றவரை கடைபிடித்து வருகிறேன். அண்மைக்கால சம்பவங்களைப் பொறுத்து இதனைத்தான் நான் ஆரம்பத்திலேயே எடுத்துக்காட்டுகளாக உங்கள் மத்தியில் முன்வைத்தேன்.
திவிநெகும வாக்களிப்புத் தொடர்பில் நானும், செயலாளர் நாயகமும், தவிசாளரும் அதில் பங்குபற்றிய எமது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம். அதற்கான காரணங்களை அவர்கள் தெரிவித்தனர். ஒருவர் தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த ஒரு கதையை கூட சொன்னார். அதுவும் சிங்கமொன்றின் கதை. நான் உங்களுக்கு தேர்தல் காலத்தில் கூறிய கிழட்டுச் சிங்கத்தின் கதையல்ல.  

நான் நியூயோர்க்கில் இருந்த பொழுது, என்னை அங்கு சந்தித்த அமெரிக்க உதவிச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக், திவிநெகும சட்டத்தை ஆதரிக்க கூடாது என என்னிடம் கூறியதாக வார இறுதி சிங்களப் பத்திரிகையொன்று பொய்யான செய்தியொன்றை பிரசுரித்திருப்பதோடு, நாடு திரும்பும் வழியில் நான் லண்டனில் தமிழ் தீவிரவாதிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் முற்றிலும் பிழையான செய்தியை வெளியிட்டு என்னைப்பற்றி பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் தவறான கருத்தையும் மனப்பதிவையும் ஏற்படுத்த முயற்சித்தது. அவ்வாறு எவையுமே நடைபெறவில்லை. 

எதிர்வரும் காலம் மிகவும் சவால்கள் மலிந்ததாக இருக்கும். மிகவும் நிதானமாகவும், சாணக்கியத்துடனும் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்றார். 









7 comments:

  1. ரவூப் ஹக்கீம் , ஜெமீல் , மற்றும் கிழக்கு மாகாண சபை மு. கா உறுப்பினர்கள் நடித்த A Well Pre planed Drama
    நாம் அளித்த அதிகப்படியான 132000 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது


    தலைப்பு : திவி நெகும


    கதாநாயகன் : ரவூப் ஹக்கீம்


    வில்லன் : ஜெமீல்


    உடன் பங்கேற்ப்பு : 6 கிழக்கு மாகாண சபை மு. கா உறுப்பினர்கள்


    பலிக்கடா : கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள்


    பிரதி பலிப்பு : அடுத்த தேர்தல் தெரியும்


    திரை அரங்கு : கிழக்கு மாகாண சபை, திருகோணமலை

    ReplyDelete
  2. மடையர்களுக்கு மற்றும் ஒரு கதை சொல்லிட்டு போய் இருக்காரு...

    ReplyDelete
  3. சார்..,என்ன இது சேதமில்லாத விட்டுக்கொடுப்பு..!! நேர்மையான கோபம்...!!!

    நீங்கள் ஒரு இனத்தின் அரசியல் விடுதலைக்காக கட்சி நத்துகிரீர்களா அல்லது உங்களது பிழைப்புக்காக கட்சி நடத்துகிறீர்களா..!!!..????

    உங்களதும் உங்களது அடிவருடிகளினதும் போக்கு முஸ்லிம்களினது தன்மானத்தையும், நேர்மையையும் நம்பக தன்மையையும் பிற இனத்தவரிடமும் அரசியல் தலைவர்களிடமும் கேள்விக்குரியதாக்கியுள்ளது.

    ReplyDelete
  4. pavaam makkal,hakeemai puinthu koolvarkalaaaa.....?

    ReplyDelete
  5. hi hi hi hi hi hi palaya jokeuuuu

    ReplyDelete
  6. paavam kuruvi (maatru matha kuruviyaha irukkumo)

    ReplyDelete

Powered by Blogger.