ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை
புஸ்ஸலாவ, ரம்பொடை பெரட்டாசி தோட்டத்தைச் சேர்ந்த ஒருவரை கூரான ஆயுததத்தால் வெட்டியும் பொல்லுகளால் தாக்கியும் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்க கண்டி மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை மரணத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களுடைய மகன் ஆகிய மூவருக்குமே கண்டி மேல்நீதிமன்ற நீதவான் மணிலால் வைத்தியதிலக்க மரணத் தண்டனை விதித்துள்ளார்.
ரம்பொடை பெரட்டாசி தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதான முதியன்ஸலாகே செனரத் பண்டா என்பவர் கூரான ஆயுதங்களினால் தாக்கப்பட்ட நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியொன்றில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்கானப்பட்ட அதே தோட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து கோவிந்தசாமி (வயது 54), அவரது மனைவியான இந்திராணி வைத்தியலிங்கம் (வயது 49) மற்றும் அவர்களுடைய மகனான கோவிந்தசாமி ஆகிய மூவருக்குமே மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (Tm)
Post a Comment