Header Ads



ஹமாஸ் கட்டுப்பாட்டு பகுதிக்கு மனைவியுடன் செல்கிறார் கட்டார் அமீர்


(tn)

ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் பலஸ்தீனின் காசா பகுதிக்கு கட்டார் நாட்டுத் தலைவர் ஷெய்க் ஹமத் பின் கலிபா அல் தானி இன்று செவ்வாய்கிழமை  உத்தியோகபூர்வ விஜயம் மேற் கொள்ளவுள்ளார். காசாவில் ஹமாஸ் ஆட்சிக்கு வந்த பின் கடந்த 5 ஆண்டுகளில் அங்கு விஜயம் மேற்கொள்ளும் முதல் அரபு நாட்டு தலைவர் கலிபா அல் தானி ஆவார். 

இஸ்ரேல் முடக்கியுள்ள காசா பகுதிக்கு வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் விஜயம் மேற்கொள்வது விசேட அம்சமாகும். காசாவுக்குச் செல்லும் கட்டார் நாட்டுத்தலைவர் அங்கு 254 மில்லியன் டொலர் பெறுமதியான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதில் காசாவில் மூன்று பிரதான பாதைகள், மருத்துவமனை மற்றும் புதிய நகர் ஒன்றை அமைக்க கட்டார் அரசு நிதியுதவி அளிக்கவுள்ளது.

இந்த விஜயம் குறித்து கட்டார் நாட்டுத் தலைவர் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாசுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் விளக்கம் அளித்துள்ளார். இந்த தகவலை மஹ்மூத் அப்பாசின் பேச்சாளர் நபில் அபு ரெடனா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். 

இதன் போது கட்டார் தலைவரின் காசா வருகைக்கு தமது வரவேற்பை தெரிவித்துள்ள மஹ்மூத் அப்பாஸ், பலஸ்தீன அரசியல் இழுபறியை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் அமைப்புக்கு அழுத்தம் கொடுக்குமாறு கட்டார் தலைவரை அப்பாஸ் கோரியுள்ளார்.

தேர்தல் மூலம் காசாவில் கடந்த 2007 ஆம்ஆண்டு ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்புக்கு மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பதா அமைப்புக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இதில் மேற்கு நாடுகள் மஹ்மூத் அப்பாஸ¤க்கு தமது ஆதரவை வெளியிட்டுவருகிறது. இந்நிலையில் இரு தரப்பும் வெவ்வேறாக பலஸ்தீனில் ஆட்சி நடத்தி வருகின்றன. காசாவை ஹமாஸ் அமைப்பு ஆளும் நிலையில் மேற்குக் கரை மஹ்மூத் அப்பாஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.

அண்மைக்காலமாக காசாவுக்கும் கட்டாருக்கும் இடையிலான உறவு வலுவடைந்துள்ளது. கடந்த ஜனவரியில் காசா பிரதமர் ஹனியான் முதல் முறையாக கட்டாருக்கு விஜயம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து காசாவின் எண்ணெய்த் தட்டுப்பாட்டை நிவர்த்திக்க கட்டார் 30 மில்லியன் லீட்டர் எண்ணெய்யை வழங்கியது.

இந்நிலையில் கட்டார் தலைவரின் வருகையை ஒட்டி காசா பகுதியில் கட்டார் கொடிகள் தொங்க விடப்பட்டு வரவேற்பு வாசகங்களும் பொறிக்கப் பட்டுள்ளன. 

எனினும் காசா விஜயம் குறித்து கட்டார் அரசு இன்னும் உத்தியோ கபூர்வமாக அறிவிக்கவில்லை. பாதுகாப்பு காரணங்களால் இந்த விஜயம் கடைசி நேரத்தில் ரத்துச்செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் எகிப்து மற்றும் காசா பாதுகாப்பு தரப்பினர் இந்த விஜயத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று தனது மனைவி உட்பட 50 பேர் கொண்ட தூதுக்குழுவுடன் கட்டார் தலைவர் 4 மணிநேர விஜயமாக காசா செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது எகிப்தின் ரபா எல்லை ஊடாக கட்டார் தலைவர் காசாவை சென்றடைய வுள்ளார். மத்திய கிழக்கில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு பின்னர் கட்டார் பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்தும் சக்தியாக செயற்பட்டு வருகின்றது.

2 comments:

  1. ஆண் ,பெண் மாதிரியும் பெண்;ஆண் மாதிரியும் உடுத்துவதுதானா இஸ்லாம்.காசுக்காக சாராயம் விற்கும் விமான
    சேவை நடாத்துபவர்களுக்கு ஈமானாவது இஸ்லாமாவது.

    ReplyDelete
  2. கத்தார் ஏயார்லைன்சை சொல்கிறீர்களா மீரான்?

    என்ன செய்வதற்கு, இந்த மாலிக்கின் மனைவிக்கு ஹிஜாப் அணியத் தெரியவில்லை.

    அவளுக்குப் பதிலாக, இந்தப் பன்னாடை அணிந்திருக்கு!

    ReplyDelete

Powered by Blogger.