ஜம் ஜம் தண்ணீரில் கலப்படம் என்ற செய்திக்கு முற்றாக மறுப்பு
புனிதமிக்க மக்காவில் கிடைத்து வரும் "ஜம்ஜம்" தண்ணீரில் கலப்படம் செய்யப்படுவதாக வரும் வதந்திகள், முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது, என மக்கா பள்ளி நிர்வாக கமிட்டியின் "டைரக்டர் ஜெனரல்" டாக்டர் அப்துர்ரஹ்மான் சுதைஸ் கூறியுள்ளார்,
ஜம்ஜம் கிணறு வற்றி வருவதாகவும், தற்போது ஜம்ஜம் தண்ணீரில் வேறு குடிநீர் கலக்கப்படுவதாகவும் நினைப்பது, அல்லாஹ்வின் வல்லமையை சந்தேகிப்பதாகும். புனித "ஜம்ஜம்" கிணற்றில் வறட்சி அல்லது பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஜம் ஜம் தண்ணீர், அதன் இயற்கை தன்மையோடு கிடைத்து வருகிறது. மேலும், அதை முழுமையாக பாதுகாத்திடும் வேலைகளை சவூதி அரசு முழுமூச்சுடன் செய்து வருகிறது. மேலும், ஜம்ஜம் கிணற்றை சுற்றியுள்ள எந்த இடத்திலும் தண்ணீர் கிடைப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதை "பூமிக்கடியில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வின் மூலம்" உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்,
எனவே "ஜம்ஜம்" நீரில் வேறு வகையான குடிநீர் கலப்படம் என்ற எந்த செய்திகளையும் பொருட்படுத்தாமல், வழக்கம்போல் இந்த நீரை அதன் சிறப்புக்கள் மற்றும் கண்ணியத்தை மனதில் கொண்டு, தாரளாமாக பயன்படுத்திக்கொள்ள ஆர்வப்படுத்தி பேசினார், மேலும் ஜம்ஜம் "நோய் தீர்க்கும் நிவாரணி" என்ற நபி மொழியையும் இன்ன பிற சிறப்புக்களையும் நினைவு படுத்தினார்.
ஜம்ஜம் தண்ணீர் என்பது, அல்லாஹ்வின் அத்தாட்சிக்களில் ஒன்றாகும், இதில் சந்தேகம் கொள்வது பெரும்பாவமாகும் என்றார்,
Islaatthin ethirikal Tholviyei
ReplyDeleteKandullathaal thangkalaal mudintha alavu sethatthai undaakka muyatchi seikinranar
Iruthiel islaatthitke vetri!!!
அனேகமாக இச்செய்தியை (வதந்தியை)பரப்பியவர்கள் சியாக்களாகத்தான் இருக்கும்
ReplyDeleteislathin trohihalin poi piracharam
ReplyDeleteThis type of Rumor important to Pure Islam then only our community will alert to do research otherwise we sleeping on truth without research the Qur'an and hatees
ReplyDelete