சுருண்டு போனது அமெரிக்கா - நியூயோர்க்கில் இருட்டு - இலங்கை பணியகமும் மூடப்பட்டது
சான்டி சூறாவளி அமெரிக்காவைத் தாக்கியுள்ள நிலையில், நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகம் மூடப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களை பாதுகாப்பாக வீடுகளில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேவேளை, நியுயோர்க்கில் உள்ள சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன மன்ஹாட்டனில் உள்ள அதிகாரபூர்வ வதிவிடத்தில் அடைக்கலம் தேடியுள்ளார். எனினும் அவரது அதிகாரபூர்வ வசிப்பிடம் வெள்ளத்தினால் சூழப்பட்ட நிலையில், தனித்து விடப்பட்டுள்ளது.
மன்ஹாட்டன் நகரின் பெரும்பகுதி வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளது. எப்போதுமே தூங்காத நியுயோர்க் நகரில் தற்போது எல்லா செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மின்விநியோகம் முற்றாகத் தடைப்பட்டு நகரமே இருளில் மூழ்கியுள்ளது.
அமெரிக்காவைத் தாக்கிய சக்திவாய்ந்த புயலான சாண்டி தாக்கியதால் கிழக்கு கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர்.
நியூயார்க் நகரம் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஏராளமான இந்திய குடும்பங்கள் வசிக்கும் நியூ ஜெர்சியிலும் கன மழை பெய்து வருகிறது. இந்த சூப்பர் சாண்டி புயல் தாக்கத்தால் அமெரிக்காவில் வரலாறு காணாத அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடல் அலைகள் மிக உயரமாக எழுந்து மிரட்டியதால், நியூஜெர்சில் உள்ள அமெரிக்காவின் மிக பழைமையான ஓய்ஸ்டர் கிரீக் அணுமின் நிலையம் உடனடியாக மூடப்பட்டது. அசாதாரண சம்பவங்கள் நடக்கலாம் என முதலில் அபாய எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அது விலக்கிக் கொள்ளப்பட்டது.
அனைத்து அணுசக்தி நிலையங்களும் பாதுகாப்புடன் இருப்பதாகவும், ஓய்ஸ்டர் கிரீக் அணுமின் நிலையம் அருகே முன்னேறி வந்த கடல் நீரின் வேகம் படிப்படியாக குறைந்ததால் ஆபத்து இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
1969-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஓய்ஸ்டர் கிரீக் அணு உலையில் தயாராகும் மின்சாரம், நியூஜெர்சியின் 9 சதவீத மின்தேவையை பூர்த்தி செய்வது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 50 மில்லியன் மக்கள் வெள்ள நீரில் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். நியூயோர்க்கை சுற்றியுள்ள மாநிலங்களில் வெள்ளநீரின் அளவு அதிகரித்து வருகிறது. 11 மாநிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள வெள்ளநீரை 14 மணி நேரம் முதல் 4 நாட்களுக்கு வெளியேற்றும் பணிகளில் மீட்புப்பணி குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் வெள்ளம், மின் தடை காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் வடக்கு கரோலினா முதல் கனெக்டிகட் வரையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்று நியூயோர்க் நகர மேயர் மைக்கேல் புளூம்பெர்க் இரு தினங்களுக்கு முன்னர் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டார். பாடசாலை கல்லூரிகளுக்கு கால வரையற்ற விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. கடைகள், திரையரங்குகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் நியூயோர்க் நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. நகரில் உள்ள ஐ.நா. அலுவலகம் உட்பட வெளிநாட்டு அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவும் குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரொம்னியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். புயல் காரணமாக அவர்கள் பிரசாரத்தை ரத்துச் செய்தனர்.
இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. சாண்டி புயல் காரணமாக அமெரிக்காவுக்கு கோடிக்கணக்கான டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த புயல் அட்லாண்டிக் கடல் பகுதியில் கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment