கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையின் கவனத்திற்கு..! (படங்கள் இணைப்பு)
கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட கல்முனைக்குடிப் பிரதேசத்தின் பல உள்ளுர் வீதிகள் பழுதடைந்த நிலையில் மிக நீண்ட காலமாகப் புனரமைப்புச் செய்யப்படாமல் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாகவும் இவ்வீதிகளைப் புனரமைத்துத்தருமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வையிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பிரதேச மக்கள் குறிப்பிட்டதாவது,
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களில் கல்முனைக்குடி பிரதேசத்தையும் உள்வாங்கி அபிவிருத்தி செய்வதற்குப் இப்பிரதேச அரசியல் அதிகாரம் கொண்டோர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. தேர்தல் காலங்களில் மாத்திரம் இப்பிரதேச வீதிகளால் வாக்குக்கேட்டு வருபவர்கள் தேர்தல் முடிந்தவுடன் எந்த வீதி பழுதடைந்துள்ளது எந்த வீதியைப் புனரமைப்புச் செய்ய வேண்டும் என சிந்திப்பதில்லை. பல்வேறு அபிவிருத்தித் தேவைகளை வேண்டி நிற்கும் இக்கல்முனைக்குடி பிரதேசம் அபிவிருத்தி நடவடிக்கையிலிருந்தும் பாரபட்சம் காட்டபடுவது வேதனையளிப்பதாப் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
தற்போது மழை காலம் என்பதால் பழுதடைதுள்ள வீதிகளால்; படாதபாடுபட்டு; சிறுவர் முதல் முதியோர் வரை தமது பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவற்றைக் கருத்திற்கொண்டு இவ்வீதிகளை உடன் புனரமைத்து இப்பிரதேச மக்கள் அசௌகரியமற்ற நிலையில் தங்களது பயணங்களை மேற்கொள்ள வழிவகுக்குமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment