கிழக்கு கடல் கொந்தளிப்பு - கடலுக்கு செல்ல வேண்டாமென உபதேசம் (படங்கள்)
(அனா)
நாட்டில் ஏற்பட்டுள்ள சிரற்ற கால நிலையையடுத்து வடக்கு, கிழக்கு மற்றும் வட - கிழக்கைச் சேர்ந்த கடல் பிரதேசத்தில் கொந்தளிப்பான நிலையால் கடலில் அலைகளின் அளவு அதிகரித்துக் காணப்படுமென்றும் அதனால் கடலுக்கு மீனவர்களைச் செல்ல வேண்டாம் என்றும் வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதையடுத்து ஆள் கடலுக்கு மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் செல்லவில்லை.
வாழைச்சேனைப் பிரதேசத்தில் இருந்து ஆள் கடலுக்கு மீன் பிடிப்பதற்கு மீன் பிடிப்படகுகள் செல்லாத நிலையில் வாழைச்சேனை மீன் பிடித் துறைமுகம் மற்றும் வாழைச்சேனை வாவியில் கட்டப்பட்டுள்ள நிலையில் கல்முனை, சாய்ந்தமருது, காத்தான்குடி போன்ற பகுதிகளில் உள்ள அதிகமான மீன் பிடிப் படகுகளும் கடல் கொந்தளிப்பு காரணமாக வாழைச்சேனை வாவிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment