Header Ads



ஹிஸ்புல்லா, ஹூனைஸ்பாருக், பைசல்காசிம், ஹாபீஸ்நஸீர்அஹமட், சிராஸ்மீராசாஹிப், ரிஸ்விபாருக் ஹஜ் வாழ்த்து

(ஜூனைட்.எம்.பஹ்த்)

அன்பினிய சகோதர சகோதரிகளே!

புனித ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இறைதூதர்கள் நபீ இப்ராஹீம்(அலை), நபீ இஸ்மாயீல்(அலை), மற்றும் அன்னை ஹாஜரா ஆகியோரின் மாபெரும் தியாகத்தை நினைவுகூறும் வகையில் தியாகத் திருநாள் உலகமெங்கும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது. லட்சோப லட்சம் முஸ்லிம்கள் ஒன்று திரண்டு புனித மக்கா நகரிலும் அரபா பெரு வெளியிலும் பிராத்தனைசெய்யும் இந்நாளை அடைந்துகொள்ளும் பாக்கியத்தை இறைவன் எங்களுக்கும் வழங்கியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த தியாகத் திருநாளில் நமது நாட்டில் சகோதரத்துவமும், சமத்துவமும் தழைத்து ஓங்குவதற்கும், நமது நாடு பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் அடைவதற்கும் தியாகம் செய்ய உறுதியெடுத்துக்கொள்வோமாக. இந்த நன்னாளில் எல்லா சமூகங்களுடனும் ஒற்றுமையுடனும் சந்தோஷமாகவும் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாகவும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்வானாக எனப்பிரார்த்திப்பதோடு, இந்த நன்னாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

அன்புடன்,
அல்ஹாஜ் எம.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்  பா.உ.
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர்

..............................................................................................................

ஹூனைஸ் பாருக் தமது ஹஜ் பெருநாள் வாழ்த்து 

நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூரும் இந்த நேரத்தில் எமது நாட்டில் கடந்த 22 வருட காலமாக அகதி முகாமில் அவல நிலையில் வாழும் வடமாகாண  சகோதர முஸ்லிம்களின் துயர் துடைப்பதற்கு முன்வருமாறும்,அம்மக்களின் மீள்குடியேற்றம் வெற்றியளிப்பதற்கும் பிரார்த்தனைகளை புரியுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்,சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் தமது ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தமது செய்தியில் தெரிவித்துள்ளதாது,

இஸ்லாத்தின் ஜம்பெருங் கடமைகளுல் ஹஜ் மிகவும் முக்கியமானதொன்று ,வசதி படைத்தவர்களுக்கு இது முதன்மையானதாகும்.அந்த வகையில் புனித ஹஜ் கடமையினையினை நிறைவேற்ற சென்றுள்ள ஹாஜிகளின் ஹஜ்ஜினை இறைவன் ஏற்றுக் கொள்ள நாமும் பிராத்த்திப்பது தான் பொருத்தமாகும்.அதே போன்று இலங்கையிலும்,சர்வதேசத்திலும் அல்லலுரும் முஸ்லிம்களுக்கு அந்த கஷ்டத்திலும்,சோததனையிலும் இருந்து விடுபட எமது துஆக்களும் முக்கிமானது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் மேலும் தெரிவித்துள்ளார். சமாதானம் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்கள் கொண்டாடும் தியாகத் திருநாள் மகிவும் முன்மாதிரி மிக்கதாக அமைய வேண்டும் என்பதில் பற்றுருதியுடன் செயற்படுமாறும்.ஹஜ் புகட்டும் பாடத்தை தமது வாழ்வில் ஏற்று நடக்குமாறும் தமது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹூனைஸ் பாருக் எம்.பி.கேட்டுள்ளார்.

....................................................................................................................... 

பைசால் காஸிம் எம்.பி. பெருநாள் வாழ்த்துச் செய்தி!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சர்வதேச மட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எதிராக பாரிய சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இன்றைய சூழலில் முஸ்லிம்கள் அனைவரும் சகல பேதங்களையும் மறந்து ஒற்றுமைப்பட திடசங்கற்பம் பூணுவோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பைசால் காஸிம் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

முஸ்லிம்கள் தமக்குள் ஒற்றுமைப்படாமல் பிரிந்து செயற்படுவதன் காரணமாகவே சர்வதேச மட்டத்தில் பல்வேறு வகையிலும் நாம் நசுக்கப்பட்டு வருகின்றோம். பல அரபு, முஸ்லிம் நாடுகள் இன்று மேற்குலக சக்திகளின் பிடிக்குள் சிக்குண்டு தவிக்கின்றன. குறிப்பாக அந்த நாடுகளின் பெற்றோலிய, எண்ணெய் வளத்தை கபளீகரம் செய்வதற்காகவும் இஸ்லாம் மார்கத்தின் எழுச்சியை தடுப்பதற்காகவும் பாரிய சூழ்ச்சித் திட்டங்களை அந்த சக்திகள் அரங்கேற்றி வருகின்றன.

அரபு, முஸ்லிம் நாடுகளில் தோன்றுகின்ற உள்நாட்டு சமூக முரண்பாடுகளை இந்த சர்வதேச - ஏகாதிபத்திய சக்திகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதை நாம் கண்கூடு காண்கின்றோம். நமக்குள் எழுகின்ற பிரிவினைகளே சூழ்ச்சிக்காரர்களுக்கு வாய்ப்பாக அமைகின்றன என்பதை உலகில் வாழ்கின்ற அனைத்து முஸ்லிம்களும்பொறுப்புடன் சிந்தித்து உணர வேண்டும். 

............................................................................................................

 ஹாபீஸ் நஸீர் அஹமட்


 'விட்டுக் கொடுப்பதில் இருந்தே தியாகம் உருவாகிறது. தியாகம் என்பது அன்பின் வெளிப்பாடாகும். நாம் மிகவும் விரும்புகின்றதொன்றை அடுத்தவருக்காக விட்டுக் கொடுக்கும் தியாக குணமானது – மனிதாபிமானத்தின் உச்சமாகும். இப்றாகிம் நபியவர்கள் இறைவனுக்காக தனது அன்பு மகனையே தியாகம் செய்வதற்குத் துணிந்து நின்ற வரலாறானது, இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் ஹஜ்ஜுப் பெருநாளினை நமக்கு நினைவூட்டுகின்றது. அடுத்த மனிதனை நேசிப்பதற்கும், சக மனிதனுக்காக விட்டுக் கொடுப்பதற்கும் இந்த ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் நாம் மென்மேலும் உறுதி கொள்ள வேண்டும்' என்று - கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

'நாம் ஒவ்வொருவரும் அடுத்த மனிதனை நேசிக்கப் பழகிக் கொண்டால், இந்த உலகம் அமைதியடைந்து விடும். சக மனிதனை நேசிக்க முடியாதவர்களால் இறைவனை நேசிக்க முடியாது. அடுத்தவர் மீது நாம் வைக்கும் அதீதமான நேசம்தான் நம்மிடம் தியாக குணத்தை வளப்பதற்கு வழிவகை செய்கிறது.  ஹஜ் என்கிற வரலாறு - நமக்கு வெறும் மார்க்கக் கடமையினை மட்டும் கற்றுத் தரவில்லை. அந்த வரலாற்றில் நமக்குப் படிப்பினையாக ஏறாளமான விடயங்கள் இருக்கின்றன. அவற்றினை நமது வாழ்வில் நடைமுறைப்படுத்துவோமேயானால் - இந்த உலகிலும், மறுவுலகிலும் நமது வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைந்து விடும்.

நமக்கு விருப்பமானவற்றை இறைவனுக்காகவும், சக மனிதனுக்காகவும் தியாகம் செய்யுமாறு இஸ்ஸாம் கூறுகிறது. இன்று நம்மிடையே ஏராளமானோர் வறுமையோடு போராடிக் கொண்டு வாழ்கையைக் கடத்திக் கொண்டிருப்பதை இந்தத் தியாகத் திருநாளில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு நம்மாலானா உதவிகளைச் செய்வதனூடாக நாம் இறைவனின் பொருத்தத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்.

ஹஜ்ஜின் போதனைகள் - ஹஜ் பெருநாள் தினத்துக்கு மட்டுமானதல்ல. நமது வாழ்க்கை முழுவதும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அன்பும், தியாகமும் கொண்ட வாழ்க்கையானது மகிழ்ச்சி நிறைந்ததாகும்.  எனவே, இப்றாகிம் நபியவர்களின் தியாகத்தைப் போற்றி நினைவு கூரும் இந்த நாளில், நமக்குள்ளும் அவ்வாறானதொரு தியாக குணத்தை வளர்த்துக் கொள்வதற்கு இன்றைய நாளில் உறுதிகொள்வோம்.  உங்கள் அனைவருக்கும் எனது ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்'!!

............................................................................................................

கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் 

(சௌஜீர் ஏ முகைடீன்)

கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள். தியாகத் திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் உலக வாழ் முஸ்லீம்கள் அனைவருக்கும் இதயங்களில் ஈமானியமும் வாழ்வில் ஒளிமயமும் வீச 'ஈதுல் அழ்ஹா' ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் உளமகிழ்வெய்துகிறேன்.

நபி இப்றாஹீம் (அலை) அவர்களது தியாக உணர்வை நினைவவு கூர்ந்து கொண்டாடப்படுகின்ற இத்தினத்தில் இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக முடுக்கி விடப்படுகின்ற சதித்திட்டங்களில் இருந்து பாதுகாப்புத் தேடி பிராத்திப்போமாக.

....................................................................................................

(இக்பால் அலி)











No comments

Powered by Blogger.