''கழிப்பறை இல்லாத வீட்டிற்கு எந்தப் பெண்ணும் மணமகளாக செல்லக்கூடாது''
""வீட்டில் கழிப்பறை கட்டாத, குடும்பத்திற்கு எந்தப் பெண்ணும் மணமகளாக செல்லக்கூடாது,'' என, மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ் யோசனை தெரிவித்துள்ளார்.
"நம் நாட்டில், கழிப்பறைகளை விட, கோவில்களே அதிகம்' என, அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சமீபத்தில் தெரிவித்தது, பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், கோடா மாவட்ட கிராமம் ஒன்றில், பெண்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் மத்தியில், நேற்று பேசிய, ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:வீட்டில் கழிப்பறை கட்டாத, குடும்பத்திற்கு எந்தப் பெண்ணும் மணமகளாக செல்லக் கூடாது; அந்த வீட்டைச் சேர்ந்த ஆண்களை திருமணம் செய்யக் கூடாது.ஒரு இளம் பெண்ணுக்கு திருமணம் செய்யும் முன், அவரின் ஜாதகமும், அவருக்கு மாப்பிள்ளையாக வரப்போகும், பையனின் ஜாதகமும் பொருந்துகிறதா என, பலர் ஜோதிடம் பார்க்கின்றனர்.
ஆனால், தன் மகள் திருமணம் செய்யப் போகும் பையன் வீட்டில், கழிப்பறை இருக்கிறதா என, யாரும் பார்ப்பதில்லை.இனியாவது, தாங்கள் வாழப் போகும் வீட்டில், கழிப்பறை உள்ளதா என, இளம் பெண்கள் பார்க்க வேண்டும். "கழிப்பறை இல்லையேல், பெண் இல்லை' என்பதை, பெற்றோரும் உறுதிப்படுத்த வேண்டும். சுகாதாரம் என்பது, பெண்களின் கவுரவம் மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடையது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
ஜாதகம் எல்லாம் விட்டுட்டு இப்படியான practicle விடயம்களை கேளுங்கப்பா
ReplyDelete